தலைப்பு : புலனாய்வாளரின் குறிப்புகள்
ஆசிரியர் : லெவ் ஷெய்னின், தமிழில் : க. சுப்பிரமணியம், நா, முஹமத் செரீஃப்
பதிப்பகம் : அடையாளம்
விலை : 100/-

பதிவு செய்த நாள்

16 ஆக் 2017
11:52

ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு புலனாய்வு அதிகாரிக்கும் இடையே ஒற்றுமைகள் அதிகம். பல்வேறுபட்ட பாத்திரங்கள், சிக்கல்கள், துன்ப நிகழ்ச்சிகள் ஆகியவற்றை புலனாய்வாளர்களும், எழுத்தாளர்களும் தொடர்ந்து தங்கள் வாழ்வில் எதிர்கொண்டே ஆகவேண்டும். “ரகசியங்களோடும், மனிதர்களோடும் உழன்று ஓரு வழக்கிலிருந்து ஆசுவாசப்படும் மறுநாளே என் மேசைமீது எத்தகைய புதிய வழக்கு வந்துவிழும் என்பதை எதிர்பார்க்க முடியாது” எனும் ரஷ்ய புலனாய்வாளர் ஷெய்னின், சிறந்த மனோதத்துவவாதியும் கூட. எப்பேர்பட்ட வழக்காக இருந்தாலும் சரி; குற்றங்களின் பின்னாலுள்ள மனிதர்கள் முக்கியமானவர்கள். சம்பந்தப்பட்ட மனிதர்களின் மனோதத்துவத்தைப் புரிந்துக்கொள்ளாதவரை குற்றங்களின் பின்னணியைக் கண்டறிய முடியாது என்பது ஷெய்னின் கூற்று. குற்ற நிகழ்வின் கோவைகளை, அதன் தொடர்புடைய சம்பவங்களை, நன்மை தீமைகளை, பலவீனங்களை, உணர்வுகளை ஊடுருவிப் பார்க்காத வரையிலும், அவனால் ஒருபோதும் வழக்குகளைக் கையாள முடியாது எனும் லெவ் ஷெய்னினை, எந்த வாய்ப்பு புலனாய்வாளனாக மாற்றியதோ அதுவே பின்னாளில் அவரை எழுத்தாளராகவும் மாற்றியிருக்கிறது. மர்மங்களின் முடிச்சுகளை அவிழ்ப்பதில் எப்போதும் ஒரு சுவாரஸ்யம் இருக்கத்தானே செய்கிறது. 
- கே.பி

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)