பதிவு செய்த நாள்

19 ஆக் 2017
12:05

 திருவண்ணாமலை மாவட்டத்தில் முதன் முறையாக இந்த வருடம் புத்தகத் திருவிழா துவங்கியுள்ளது. மாவட்ட நிர்வாகம், நேஷனல் புக் டிரஸ்ட், பள்ளிக்கல்வித்துறை இணைந்து இந்தப் புத்தகத் திருவிழாவை நடத்துகிறார்கள். ஆகஸ்ட் 18 முதல் 27ம் தேதி வரைக்கும் விழா நடக்கவிருக்கிறது.

திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் 18 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 120 புத்தக கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் ஒரு லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. 

புத்தகத் திருவிழாவில்
புத்தகத் திருவிழாவில்

காலை 11 மணி முதல் இரவு 10 மணிவரை புத்தக கண்காட்சி அரங்குகள் திறந்திருக்கும். மாலை நேரத்தில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கள், கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

19ம் தேதி தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் த.உதயசந்திரன், 20ம் தேதி திரைப்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார், 21ம் தேதி தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர்ம.ராஜேந்திரன், 22ம் தேதி திரைப்பட இயக்குனர் ராஜூமுருகன், 23ம் தேதி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், 24ம் தேதி மருத்துவர் கு.சிவராமன், 25ம் தேதி சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன், 26ம் தேதி ஒடிசா மாநில கூடுதல் தலைமை செயலாளர் ஆர்.பாலகிருஷ்ணன், 27ம் தேதி திரைப்பட இயக்குனர் மிஷ்கின் ஆகியோர் பங்கேற்கின்றனர்.



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)