பதிவு செய்த நாள்

21 ஆக் 2017
12:47

 ட்டையபுரம் சின்னச்சாமி என்னும் நூற்பாலை உரிமையாளரின்  மகனே சுப்பிரமணிய பாரதி. தகப்பனார் சின்னச்சாமி தன் பருத்தி அரவை ஆலைத் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடியினால் மனமுடைந்து இறந்துபோனார். வளமையில் பிறந்த பாரதிக்கு வறுமையே வாழ்வானது. வறுமையிலும் வாழ்வித்த தமிழால் வானுயர்ந்த கவிஞன் தான், “வயிற்றுக்குச் சோறிடவேண்டும் இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்” என்று கவிதையில் பாடிவைத்தான்.
தனியொருவனுக்கு உணவில்லை என்றால் இச்செகத்தினை அழித்துடுவோம் என்ற பாரதியின் வார்த்தைக்கான பொருள் இவ்வுலகத்தை அழிப்பதில்லை. தேசாபிமானியாகவும், உலகாபிமானியாகவும் பரந்த சிந்தனைகளோடு திகழ்ந்த பாரதி அப்படிச் சொல்லியிருப்பானா என்ன? தனிமனிதனுக்கு உணவில்லை என்றால் தரிசு நிலங்களை (செகம்) எல்லாம் அழித்து விளைநிலங்களாக்கி உணவிடச் சொல்கிறான் பாரதி. பசி வந்தால் மன ஓட்டங்களும், சிந்தனைகளும் சீர்குலையும் என்ற மொழிகள் இந்தக் கவிஞனின் வாழ்வில் பொய்யாகித் தோற்றன. 

பாரதியார் - செல்லம்மாள்
பாரதியார் - செல்லம்மாள்


“மானம் குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை,
தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம் ” (நல்வழி-26)
செல்லம்மாளின் சொந்த ஊரான கடையத்தில் பாரதி வாழ்ந்துவந்த காலத்தில்வ றுமையும் பசியும் பாரதிவீட்டுக் கூரையின் நிழல்போலக் கவிழ்ந்துகிடந்தது. பாரதியின் தமிழுக்குக் கொள்வாரில்லை. செல்லம்மாள் பாடுபட்டு அக்கம்பக்கத்து வீடுகளில் கடன் பெற்றுவந்த நெல்லைக் காய வைத்திருக்க, அதைச்சி ட்டுக்குருவிகள் கொத்தித் தின்பதைக் கண்டு ரசித்துக்கிடந்தாராம் பாரதி.
நாமும் நம் பிள்ளைகளும் இரண்டு நாள் பட்டினியாகக் கிடக்கும் வேளையில் இப்படி செய்யலாமா நீங்கள் என்று கேட்ட செல்லம்மாளிடம், “ஒருபடி அரிசியால் நாம் மூன்றுபேர் பசியாறலாம்; இங்கே பார் எத்தனைக் குருவிகள் தங்கள் பசியைப் போக்கிக்கொள்கின்றன . இவற்றுக்கு நம்மைவிட்டால் வேறு யார் உணவிடுவார்கள் என்ற பாரதிதான் பாடிவைத்தான் “காக்கைக்குருவி எங்கள் சாதி; நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்” பசித்திருந்த வேளையிலும் பரந்த மனத்துடன் விரிந்திருந்த பாரதியின் எண்ணங்கள்தான் எத்தனை வியப்பானது.
குளிரில் நடுங்கிக்கொண்டு தெருவில் நடந்துவந்த ஒரு பிச்சைக்காரனைக் கண்டதும், தான் உடுத்திருந்த வேட்டியை அவனுக்குக் கொடுத்துவிட்டு துண்டைக்கட்டிக்கொண்டு வீடு திரும்பியிருக்கிறார் கவிஞர். வழியில் பாரதியைக் கண்ட நண்பரொருவர், “கொடுத்தது தான் கொடுத்தீர் துண்டைக் கொடுத்துவிட்டு வேட்டியில் வந்திருக்கக்கூடாதா என்று கேட்க, நான் வீட்டிலிருப்பவன் அவன் வெளியில் அலைபவன் வேட்டியை அவனுக்குக் கொடுப்பதுதானே சரி என்றாராம். குணக்குன்று பாரதி நீர்.
பாரதியின் பதில்மொழிகேட்ட நண்பர் புதுவேட்டி ஒன்றை அவருக்கு பரிசாய்க் கொடுக்கவும், “பார்த்தீரா! கொடுக்கக் கொடுக்கத்தான் தெய்வம் தரும்; ஒரு பழைய வேட்டியைக் கொடுத்தேன் அவனுக்கு , இறைவன் உம்மூலமாக புதுவேட்டி அனுப்புகிறார்” என்றாராம்.
“வாழ்க்கை முழுவதும் அவன் தோற்றும், எந்நிலையிலும் கண்ணீரைக் கசியவிடாமல் களிப்பை மட்டுமே காட்டியிருக்கிறான் என்னும் வலம்புரியின் வார்த்தைகள் பாரதியின் வாழ்வைப் படம்பிடித்துக்காட்டுகின்றது. வறுமையில் உழன்று பாலுக்கும், கூழுக்கும் தமிழ் பாடி, மன்னர்களைப் புகழ்ந்து பாடிப் புரவலர்களாகவே வாழ்ந்து தன் கவித்திறனை அடமானம் வைத்தப் புலவர்கள் மத்தியிலே,
தேடிச் சோறுநிதந் தின்று -- பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி -- மனம்
வாடித் துன்பமிக உழன்று -- பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து -- நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி -- கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் -- பல
வேடிக்கை மனிதரைப் போலே -- நான்
வீழ்வே னன்றுநினைத் தாயோ?
என்று வீழாத தன்மானத்தோடு வாழ்ந்தான். ஒருபுறம் ஆங்கிலேய அரசு, மறுபுறம் தன் சொந்த இனத்துமக்களின் ஏளனப்பேச்சு, மற்றொரு திசையில் சுட்டெரிக்கும் வறுமை என மும்முனைத் தாக்குதலில் மாமத யானையாய் மாண்புற நின்றவன் பாரதி.
- த.கிருபாகரன்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)