பதிவு செய்த நாள்

23 ஆக் 2017
12:15

 மிழ் சிறுகதைகளின் பிதாமகன் என்றழைக்கப்படும்  வ.வே.சுப்பிரமணியம், மகாகவி பாரதியார் மற்றும் அரவிந்தர் ஆகியோரின் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தவர் வ.ராமசாமி. முற்போக்கு சிந்தனைகொண்ட வ.ரா.,வை ‘அக்ரஹாரத்தின் அதிசய மனிதர் என்று வருணித்தார்’ அறிஞர் அண்ணா.
சுதந்தரன், பிரபஞ்சமித்திரன், தமிழ்நாடு,சுயராஜ்யா, வீரகேசரி, பாரததேவி, மணிக்கொடி முதலான தமிழின் முக்கிய செய்தி மற்றும் சிற்றேடுகளில் பொறுப்பு வகித்த வ.ரா., பத்திரிகைத்துறையில் கல்கி, புதுமைப்பித்தன் ஆகியோருக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.வங்காள மொழியில்  பக்கிம்சந்திர சட்டர்ஜி எழுதிய பாக்களை தமிழில் வ.ரா., மொழிப் பெயர்த்தபோது பாரதியால் மனமுவந்து பாராட்டப்பட்டார்.

வ.ராமசாமி
வ.ராமசாமி


எழுத்தின் மீது தீராக்காதல் கொண்ட வ.ரா.,சுந்தரி, சின்னச்சாம்பு, விஜயா, கோதைத் தீவுஆகிய நாவல்களையும் புதினங்களும், கற்றது குற்றமா? சிறுகதைத் தொகுப்பும் எழுதியுள்ளார். உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துக்கொண்டமைக்காக சிறை சென்றபோது, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக அலிகார் சிறையில் இருந்துகொண்டே இவர் எழுதிய  கட்டுரைகள் ‘ஜெயில் டைரி’ என்ற பெயரில் நூலாக வெளிவந்தது.  ‘பாரதியாரின் உரைநடை வாரிசு’ என்று கொண்டாடப் படும் வ.ரா., நான்கு நாவல்கள்,ஐந்து வாழ்க்கை வரலாறு நூல்கள், ஆறு சிந்தனை நூல்கள், இரண்டு மொழிபெயர்ப்புகள் என மொத்தம் பதினேழு நூல்களை எழுதியுள்ளார்.
இன்று அவரது பிறந்த தினம் ( ஆகஸ்ட் 23, 1951)வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)