பதிவு செய்த நாள்

23 ஆக் 2017
12:19

கேரளத்தில் வைக்கம் அருகே தலையோலப் பறம்பில் பிறந்தவர் முகமது பஷீர். இளம்வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைசென்று, பின்னர் நாடோடியாக வாழ்க்கையை வாழத் தொடங்கிய பஷீர் மலையாள இலக்கியத்தின் முதன்மையான எழுத்தாளர்.

பஷீர் பற்றிக் குறிப்பிடும்போது,“ அவர் ஒரு எழுத்தாளரே அல்ல, கதைசொல்லி. பஷீரின் குரலில் அல்லாமல் அவரது கதைகளை நாம் நினைவுகூரவேகூட முடிவதில்லை. வாசகன் பஷீரைத் தொடர்ந்து பார்த்தபடியே இருக்கிறான். பஷீர் திருடனாக, நாடோடியாக, சமையற்காரராக, கைஜோசியக்கரராக மாறுவேடமிட்டு அவன் முன் வந்துகொண்டே இருக்கிறார்.

மெல்லமெல்ல அவன் நெஞ்சில் ஒரு படிமமாக ஆகி நாள்செல்லச் செல்லத் தொன்ம வடிவம் ஆகிறார். பஷீரின் ஆக்கங்கள் அவற்றின் மொழிநடையால் மட்டுமே பேரிலக்கியங்களாக ஆகின்றன. தன் நாற்பதுவயது வரை ‘அனல் கக்கும்’ இலக்கியங்களையே எழுதிவந்ததாகவும் ஒரு கட்டத்தில் அவற்றையெல்லாம் துணிந்து கொளுத்திவிட்டு இன்றைய நடைக்கு வந்ததாகவும் பஷீர் எழுதியிருக்கிறார்.

பஷீரின் தலைக்கு பிரிட்டிஷ் அரசு விலைவைத்த, திருவிதாங்கூர் அரசு அவரை சிறையில் அடைத்த எழுத்துக்கள் எதுவுமே இன்று கிடைப்பதில்லை. பஷீர் பஷீராக ஆனபிறகுள்ள எழுத்துக்களே இன்று கிடைக்கின்றன.” என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.

கப்பல் ஊழியர், சூதாட்டவிடுதி ஊழியர், திருடன் என்று பலதரப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து அனுபவித்தவர் பஷீர். கடுமையான வறுமையையும் சந்திக்கத் தவறவில்லை. ஆரம்பத்தில் இடதுசாரி சிந்தனையோடு இயங்கியவர் பின்னர் இஸ்லாமிய சூபி மரபை ஏற்றுக்கொண்டார்.  ‘பஷீர் தனிவழியிலோர் ஞானி’ என்கிற அவரது வாழ்க்கை வரலாறு நூல் பேராசிரியர் எம்.கே.ஸாநுவால் எழுதப்பட்டு பாரதி புத்தகாலயம் நூலாக வெளியிட்டுள்ளது.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)