பதிவு செய்த நாள்

23 ஆக் 2017
14:17

   ண்டுதோறும் சிறந்த கலை இலக்கிய நூல்களுக்கான விருதுகளை வழங்கிவரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் 2016ம் ஆண்டுக்கான விருதுபெறும் நூல்களின் பட்டியலை அறிவித்துள்ளது. அதன் விபரம் வருமாறு:- 

சிறந்த நாவல்
            கே.பி. பாலச்சந்தர் நினைவு விருது

 ‘முகிலினி
நூலாசிரியர் : இரா.முருகவேள்
பொன்னுலகம் பதிப்பகம்

 சிறந்த கவிதை நூல்
            வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன்- செல்லம்மாள் ப.ஜெகந்நாதன் நினைவு விருது

‘ஆதிமுகத்தின் காலப் பிரதி’
நூலாசிரியர் : இரா.பூபாலன்
பொள்ளாச்சி இலக்கிய வட்டம்

சிறந்த சிறுகதை நூல்
            அகிலா சேதுராமன் நினைவு விருது

 ‘தாழிடப்பட்ட கதவுகள்
நூலாசிரியர் : அ. கரீம்
பாரதி புத்தகாலயம்

சிறந்த மொழிபெயர்ப்பு நூல்
            வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது

 ‘பயங்கரவாதியெனப் புனையப்பட்டேன்
பொழிப்பெயர்ப்பாளர் :அப்பணசாமி
எதிர் வெளியீடு

சிறந்த விளிம்புநிலை மக்கள் படைப்பு
            அமரர் சு.சமுத்திரம் நினைவு விருது

‘தீண்டாமைக்குள் தீண்டாமை : புதிரை வண்ணார் வாழ்வும் இருப்பும்’ 
நூலாசிரியர் : சி. லஷ்மணன் -கோ.ரகுபதி
புலம் வெளியீடு

சிறந்த கலை இலக்கிய விமர்சன நூல்
            இரா.நாகசுந்தரம் நினைவு விருது

‘மணிமேகலை பன்நோக்கு வாசிப்பு
நூலாசிரியர் : முனைவர் கா.அய்யப்பன் 
காவ்யா பதிப்பகம்

சிறந்த தொன்மைசார் நூல்
            கே.முத்தையா நினைவு விருது

'சிந்துவெளி பண்பாட்டின் திராவிட அடித்தளம்'
நூலாசிரியர் : ஆர்.பாலகிருஷ்ணன்
பாரதி புத்தகாலயம்

விருது முடிவுகளை தமுஎக சங்கத்தின் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் மற்றும் பொதுச்செயலாளர் சு.வெங்கடேசன் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். விருது வழங்கும் விழாவும், நூல்கள் குறித்தான ஆய்வரங்கமும் நாகர்கோவில் நகரில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

-நூல்வெளி.காம்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)