பதிவு செய்த நாள்

30 ஜன 2017
16:47
இண்டமுள்ளு அரசன்

இருநூறு தலைக்கட்டுகள் உள்ள அரியலூர் சுற்றுவட்டார கிராமமான உகந்த நாயகன் குடிக்காட்டிலிருந்து, ஒரு இரண்டாம் தலைமுறைக் கதைசொல்லியாக உருவெடுத்திருக்கிறார் அரசன். தண்டவாளச் சத்தமும், சிமெண்டு லாரிகளின் தூசியும் மட்டுமே படிமங்களாய் ஆகிப் போன தன் குறுநிலப் பரப்பின் இருபந்தைந்து ஆண்டுகால மக்களின் பழைய வாழ்க்கையை, தன் கதைகளின் மூலம் எழுதிச் செல்லும் அரசனின் முதல் சிறுகதைத் தொகுப்புக்குப் பேர் ‘இண்டமுள்ளு’

இண்டமுள்ளு தன்னைக் கடந்து செல்லும் யாரையும் கொத்தாக இழுத்துப் பிடித்துக்கொள்ளும் வேலிச்செடி. இவரது கதைகளும் அப்படியே. நிலம் சார்ந்த வட்டார வழக்கு மொழியில் தன் கதைப் பயணத்தைத் தொடங்கியிருக்கும் அரசன், தன் மண்ணின் வாழ்வியல், விவசாய முறைகள், கால்நடை வளர்ப்பு, ஆண் பெண் உறவுச் சிக்கல்கள், நகர்மய மான கிராமங்களில் ஏற்பட்ட குடும்பச் சிதைவுகள் ஆகியவற்றைத் தன் படைப்பு வெளியாகக் கொண்டு இயங்குகிறார்.



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)