பதிவு செய்த நாள்

24 ஆக் 2017
14:57

  தினமலர் நாளிதழ், உலகத்தமிழ் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், மலேசியாவின் பேராக்கில் உள்ள சுல்தான் இத்ரிசு கல்வியியல் பல்கலையில், 'உலகத் தமிழ் இணைய மாநாடு' ஆகஸ்ட் 25ல் தொடங்கவுள்ளது. மொத்தம், மூன்று நாட்கள் நடக்கும் மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, மொரீஷியஸ், சிங்கப்பூர், இலங்கை, உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த தமிழறிஞர்கள் பங்கேற்க உள்ளனர். மாநாட்டின் இந்தியப் பொறுப்பாளரும், இணைத் தலைவருமான லட்சுமி “இந்தியாவில் இருந்து, தமிழ் மொழியியல் ஆய்வுகள் அடங்கிய, 60 சிறப்பு கட்டுரைகள், மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட உள்ளன. ஏராளமான தலைப்புகளில், சிறப்பு கருத்தரங்குகள் நடக்க உள்ளன.” என தெரிவித்திருக்கிறார்.
நிகழ்வுகள் :
முதல் நாள் : நாளை கணினித் தமிழ், கற்றல் கற்பித்தல், கணினி மொழியியல் உள்ளிட்ட தலைப்புகளில், நுால் வெளியீட்டு விழா நடக்க உள்ளது. 'லெமூரியா' மின்னிதழ் மற்றும் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், காப்பிய இதழ் துவக்க விழா நடக்க உள்ளது. மலேசிய போக்குவரத்து அமைச்சகத்தின் சிறப்பு ஆலோசகர் தான்ஸ்ரீ டத்தோ ஸ்ரீ எம்.கேவியஸ் தலைமை வகித்து பேசுகிறார்.

இரண்டாம் நாள் : மலேசிய சுல்தான் கல்வியியல் பல்கலை பேராசிரியர் இலக்குவனார், 'தமிழ் கணிம சொல்லாய்வுகள் குறித்தும், மலேயா பல்கலை இந்திய ஆய்வியல் துறை பேராசிரியர் குமரன், சமூக ஊடகத்தில் சிறுதொழில் வணிக மேம்பாடு குறித்தும் விளக்க உள்ளனர்.
மலேசிய கல்வி அமைச்சகத்தின், கல்வி நிர்வாக தலைமைத்துவ பயிற்சி கழகத்தின் முதுநிலை விரிவுரையாளர் குமரவேலு ராமசாமி, '21ம் நுாற்றாண்டில் கல்வியின் உருமாற்றம்' என்ற தலைப்பில் பேச உள்ளார்.
மலேசிய தேசிய பல்கலையின், முதுநிலை விரிவுரையாளர் ரஹிம் கமாலுதீன், 'சமூக வலைதளங்களும் குற்றங்களும்' என்ற தலைப்பில் பேசுகிறார். கருத்தாளர்கள் பகிர்வுக்கு இடையே, உலக முழுவதும் இருந்து வரும் பல்துறை தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், நிபுணர்கள் கட்டுரைகளை சமர்ப்பிக்க உள்ளனர்.

மூன்றாம் நாள் : மலேசிய, சுல்தான் இத்ரிசு கல்வியியல் பல்கலை மொழியியல் உயராய்வு மையத்தின் பேராசிரியர் காமாட்சி, கணினி மொழியியல் முன்னேற்றங்கள் குறித்து விளக்க உள்ளார். பல்கலைகளில் துணைவேந்தர்கள், ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்களுக்கு மாநாட்டின் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டு, கவுரவிக்கப்பட உள்ளனர்.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)