தலைப்பு : சிவப்புக்கோள் மனிதர்கள்
ஆசிரியர் : க.சரவணன்
பதிப்பகம் : புக் ஃபார் சில்ரன்
விலை : 50/-

பதிவு செய்த நாள்

31 ஆக் 2017
17:08

 “டேய் அருண் உண்மையாவா சொல்ற? இப்ப இருக்கிற உங்க வீட்டில் கரண்ட் இல்லையா?”
“நிஜமாத்தான் சொல்றேன். எங்க வீட்டில் மட்டும் இல்லை. எங்க ஏரியாவிலேயே கரண்ட் கிடையாது. அடுத்த வாரம்தான் செளராஸ்டிராபுரம் போறோம். நீ வேணும்னா இந்த வாரம் வெள்ளிக்கிழமை எங்க வீட்டுக்கு வாயேன். ஒருநாள் தங்கலாம்.”
“எங்கம்மா கிட்ட கேட்டு எப்படியும் வந்திடுறேன். உங்கம்மா அப்பா திட்ட மாட்டாங்களே.”
“நான் எல்லாம் அவன் வீட்டில் பல முறை தங்கி இருக்கேன்.அவுங்கம்மா திட்டமாட்டாங்க. நல்லா தோசை ஊத்தி தருவாங்க” என்றான் பூவரசன்.
“ஆமாம், பவித்ரா, எங்கம்மா ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. நீ வர்றது சொன்னா சந்தோஷப்படுவாங்க. ஆனா நீ இருட்ல ஃபேன் காத்து இல்லாம தூங்குவியா?”
“டேய்...இருட்டு எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கதான் வர்றேன். வெள்ளிக்கிழமை பள்ளிக்கூட முடிஞ்சு எங்கம்மாட்ட சொல்லிட்டும் போவோம்”
வீட்டிற்கு வந்ததும், அருண் பிறந்ததில் இருந்து இருந்த கரண்ட் இல்லாமல் வளர்ந்த கதையை தன் அம்மாவிடம் கூறினாள். எப்போதும் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தாலும் பவித்ரா, பள்ளியில் நடந்த எல்லா விஷயங்களையும் தன் அம்மாவிடம் பகிர்ந்துகொள்வாள். அவள் அம்மாவும் எத்தனை வேலை இருந்தாலும்,
அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு பொறுமையாகக் கேட்பார். குழந்தைகள் பள்ளியில் நடந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள நினைத்தாலும், அதைப் பல பெற்றோர்கள் தவிர்த்துவிடுகிறார்கள். அதனாலே குழந்தைகளுக்கு நிகழும் நல்லது கெட்டது பெற்றோர்களுக்குத் தெரியாமல் போய்விடுகிறது. “அம்மா இருட்டா இருக்கிற அருண் வீட்டில் ஒரு நாள் தங்கி இருந்துட்டு வரட்டா?”
“போகாதேன்னு சொன்னா சும்மாவா விடுவ....உங்க அப்பாட்ட பெர்மிஷன் வாங்கி எப்படியும் போய்டுவ. போகும்போது துணைக்கு அண்ணன் லெனினையும் கூட்டிட்டுப்போ” என்றார் அம்மா.
தீர்த்தக்காட்டை அடைந்தபோது, 5.30 மணிக்கு மேல் ஆகியிருந்தது.
வீடுகள் செம்மண் கொண்டு கட்டப்பட்டிருந்தன. அடுத்தடுத்து வீடுகள் வரிசையாக இருந்தன. வீடுகள் 10க்கு 10 அளவு உடையவையாக இருந்தன. வீடுகளின் முன்னாலும் பின்னாலும் கருவேல முள் மரங்கள் வளர்ந்திருந்தன. சில வீடுகளில் முள்முருங்கை மரங்கள் வைத்திருந்தனர். காலி இடங்களில் வேப்பமரம் உயர்ந்து வளர்ந்திருந்தது.
பல வீடுகள் பனை ஓலையில் வேயப்பட்ட குடிசை வீடுகளாக இருந்தன. சில வீடுகள், ஓட்டு வீடுகளாக இருந்தன. 30 அடி பிரதான சாலையில் நடந்தார்கள். அரச மரம் உயர்ந்து வளர்ந்து நிழல் தந்து கொண்டிருந்தது. அதையொட்டி டீக்கடை இருந்தது. வழியெங்கும் ஓலைக் குடிசைகள், காரை வீடுகளையும், அடுக்கு மாடி வீடுகளையும் பார்த்து இருந்த பவித்ராவுக்கு, அவை அதிசயமாய் காட்சியளித்தன.தெருக்களில் குழந்தைகள் மேல்சட்டைகள் இன்றி ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். சிலர் கிழிந்த கால் சட்டையுடன் மூக்கு ஒழுகியவாறு பம்பரம் விட்டுக் கொண்டிருந்தனர். இன்னும் சில குழந்தைகள் சிறிய சைக்கிள்கள் ஓட்டியபடி இருந்தனர்.
அரச மரத்தைக் கடந்து வெற்று இடத்தில் நடக்கத் தொடங்கினர். பல டிரான்ஸ்பார்ம்கள் இருக்க, உள்ளே யாரும் செல்லாதவாறு மின்சாரத்துறையால் நான்கு பக்கமும் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. அதையொட்டிய ஆறடி மண் பாதையில் பேசியபடி நடந்தார்கள்.
“கடவுள் எங்க இருக்கிறார்னு தெரிஞ்சா போதும், அவர பார்த்து ஒரே கேள்வி கேட்கணூம். இங்க இருக்கிற எங்களைக் காசு பணம் இல்லாத இருட்டில் ஏன் வாழ்ற மாதிரி படைச்சேன்னு கேட்கணூம்” என்றபடி தரையில் உதைத்தான் அருண்.
அவன் உதைத்த இடத்தில் பந்து மாதிரிபொருள் உருண்டு ஓடியது. இப்போது அந்தப் பந்து ஒளிர்ந்தது.
“டேய் அருண், இங்க பாருடா...யாரோ லைட் பந்தை விளையாடிட்டு போட்டுட்டுப் போயிட்டாங்க போல இருக்கு. நீ உதைச்சதும் தன்னால எரியுது” என குனிந்த எடுக்கச் சென்றான் பூவரசு.
அப்போது, பந்தின் ஒரு பகுதியில் கதவு மாதிரி ஒன்று திறந்தது.
“டேய் இங்க பாருங்கடா... பந்துல இருந்து ஒரு கதவு திறக்குது” என்று பூவரசு கத்தினான்.
அனைவரும் குனிந்து பந்தைக் கவனித்தார். ஸ்பைடர்மேன் போல உடை அணிந்த பொம்மை ஒன்று அதில் இருந்து இறங்கியது. அருண் கூர்ந்து கவனித்தான். அந்த பொம்மையின் உருவம் விசித்திரமாக இருந்தது.
“டேய்... ஏதோ ஜந்துமாதிரி இருக்குடா”
இப்போது அந்த விசித்திர ஜந்து வளரத்தொடங்கியது.  பார்க்கவே அச்சமூட்டுவதாக இருந்தது. நண்பர்கள் பயந்து நடுங்கினார்கள்.
“வேற்றுக்கிரக வாசிபோலத் தெரியுது?”
“ஐயோ... ஓடுங்க” என்று குரல்கொடுத்தபடி எல்லோரும் ஓடத்தொடங்கினர்.
அப்போது அந்த விநோத மிருகும், ஆக்டோபஸ் மாதிரியான தன் அத கைகள், ஓடியவர்களை வளைத்துப் படித்து, ஓடமுடியாமல் செய்தது.
“யாரும் பயப்படத்தேவை இல்லை. நான் ஒன்றும் செய்யமாட்டேன்” என்று கரகரப்பான குரலில் அது பேசியது. நண்பர்கள் அமைதியானார்கள்.
அது விண்கலத்தில் போக எல்லோரையும் அழைத்தது. முதலில் இன்குபேட்டரில் அமர்ந்து கொள்ளவேண்டும் அப்போதுதான் பிரத்தியேக உடை தேவையில்லை என்று சொன்னதால், அனைவரும் பயமில்லாமல் இன்குபேட்டரில் அமர்ந்தனர். அதன் உள்ளே இருந்து பார்த்தால், வெளியில் உள்ள அனைத்தும் தெளிவாகத் தெரிந்தது. இன்குபேட்டரில் இருந்து பட்டனைத் தொட்டவுடன், அது பறந்து விண்கலத்தின் உள்ளே சென்றது.
விண்கலத்தில் வேற்றுக்கிரகவாசியின் கடவுளை நோக்கிய பயணத்திற்கு அனைவரும் தயாராகினர்.
விண்கலம் ஆகயத்தில் மேகங்களின் ஊடே சீறிப்பாயத் தயாரானது...வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)