பதிவு செய்த நாள்

09 செப் 2017
13:07
 சிலப்பதிகாரம் கற்போம்! - பனுவல் புத்தக நிலையம்

   மிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் முதன்மையானது சிலப்பதிகாரம். அறக்கற்பும், அரசியல் புரட்சியும், எந்நாட்டவரும், எக்காலத்தவரும் போற்றுவதற்குரிய சிலப்பதிகாரத்தை இன்றைய தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் விதமாக, சிலப்பதிகார வகுப்பினை ஏற்பாடு  செய்துள்ளது பனுவல் புத்தக நிலையம். இதுதொடர்பாக, நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் அமுதரசன் நூல்வெளி.காம் வாசகர்களுக்கு அளித்த அறிமுகத்திலிருந்து...

 “சினிமாத்தனமாகச் சொன்னால், சிலப்பதிகாரம்  என்றால் என்ன என்று ஒரு பொதுவான கேள்வியை யாரிடமாவது முன்வைத்துப் பார்த்தால், அதனை ஒரு முக்கோண காதல் கதை என்கிற தோற்றத்திலே விவரிப்பார்கள். சங்கத் தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரம் குறித்து தெரிந்துகொள்ளவேண்டிய செய்திகள் எவ்வளவோ இருக்க இந்தமாதிரி உதாரணங்களால் நம்முடைய இலக்கியங்கள் சரியான தளங்களை சென்றுசேரவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

உண்மையில் சிலப்பதிகாரம் பேசுவது கண்ணகி-கோவலன் – மாதவி ஆகியோரின் வாழ்க்கையை மட்டும் பேசும் காப்பியம் அல்ல. அது ஐந்திணை நிலங்களையும், மூவேந்தர்களின் ஆட்சிப்பரப்பையும், அக்காலத்தைய வணிகப் பெருவழியினையும்  தமிழ் மக்களின் வாழ்வியலையும், வழிபாடுகளையும் மிகக்குறிப்பாகச் சொன்னால் அன்றைய அரசியல் நிகழ்வுகளையும் படம்பிடித்துக்காட்டும் இலக்கிய ஆவணம்.

அதனால் தான் அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும் என்ற தலைப்பில், இன்றைக்குள்ள அரசியல் சூழல்களை, இலக்கியத்தின் வாயிலாகப் புரிந்துகொள்கிற முயற்சியாக இந்த சிலப்பதிகார வகுப்பினை ஒருங்கிணைத்திருக்கிறோம். இதன் வாயிலாக, வாரம்தோறும் ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் அல்லது எழுத்தாளர்களை வரவழைத்து சிலப்பதிகாரம் குறித்த பல்வேறு செய்திகளை சுவைபட விளக்கவும், கலந்துரையாடவும் செய்யும் இந்த பயிற்சி வகுப்பு மூன்று மணிநேரம் நடைபெறும். இந்த சிலப்பதிகார வகுப்பில் கலந்துகொள்வதின் மூலம் தமிழ் இலக்கியத்தின் முதன்மையான காப்பியம் பற்றித் தெரிந்துகொள்ளலாம்” எனத் தங்களுடைய இந்த முயற்சியின் நோக்கம் குறித்து விவரித்த அமுதரசன் அடுத்தடுத்து தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள் குறித்தான அமர்வுகளுக்கும் தயாராகிக் கொண்டிருக்கிறோம் என்று முடித்தார்.

அமுதரசன்
அமுதரசன்

 பயிற்சி வகுப்புக்கான  நாள் நேரம் மற்றும் கட்டண விபரங்களுக்கு  : (+91) 8939967179

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)