பதிவு செய்த நாள்

14 செப் 2017
13:41
கி.ராஜநாராயணன் -95 முழுநாள் நிகழ்வு

ரிசல் இலக்கியத்தில் மட்டுமல்லாது தமிழ் இலக்கிய வரம்பிலும் மகத்தான பல சாதனைகள் புரிந்துவரும் எழுத்தாளரும், கதைசொல்லியுமான, கி.ராஜநாராயணனின் 95வது பிறந்தநாள் விழா எதிர்வரும் செப்டம்பர் 16ம் நாள் புதுவை பொறியியற் கல்லூரி வளாகத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்வில், ‘கி.ராஜநாராயணன்’ ஆவணப்படம் திரையிடல், மண்ணும் இசையும் கலை நிகழ்ச்சி, கதை சொல்லல், கருத்தரங்கம், நாடகம் ஆகிய நிகழ்வுகளோடு, கி.ரா குறித்து, சிலம்பு.நா.செல்வராசு எழுதிய, ‘பேராசிரியர்.கி.ரா’, நூல், கி.ராஜநாராயணன் குறித்து தமிழ் எழுத்துலக ஆளுமைகள் பலரும் எழுதி, கழனியுரன் தொகுத்திருக்கும் ‘கிரா என்றொரு கீதாரி’ மற்றும், புதுவை எழுத்தாளர்கள் தொகுத்து வெளியிடும், ‘கி.ரா- முடிவிலா பயணம்’ ஆகிய நூல்கள் வெளியிடப்படுகின்றன.

நிகழ்வின் முக்கிய அம்சமாக சிறந்த சிற்றிதழுக்கான கரிசல் விருது வழங்கும்விழாவும் நடைபெற இருக்கிறது. 2017ம் ஆண்டிற்கான கரிசல் விருது, தளம் காலாண்டிதழுக்கும், சிறந்த எழுத்தாளருக்கான விருது எழுத்தாளர். ரமேஷ் பிரேதனுக்கும்  வழங்கப்படவுள்ளது. 

காலை நிகழ்வுகளை, எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், தலைமையேற்று நடத்த, புதுவை பல்கலைக் கழக புல முதன்மையர் பேரா. ஆ.திருநாகலிங்கம் துவங்கி வைக்கிறார். பேரா. வெங்கட சுப்புராயநாயகர் வரவேற்புரை வழங்க, பேரா. க.பஞ்சாங்கம் நோக்க உரை நிகழ்த்துகிறார். பேரா. இரவிக்குமார்  நிகழ்வினைத் தொகு த்து வழங்க  பத்திரிகையாளர் பி.என்.எஸ்.பாண்டியன் நிகழ்வுகளை ஒருங்கிணைக்கிறார். தமிழ் இலக்கிய எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் கி.ரா படைப்புலக வாசக அன்பர்கள் அனைவருக்கும் நிகழ்வில் கலந்துகொள்ள வரவேற்பு விடுக்கப்பட்டுள்ளது. 



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)