பதிவு செய்த நாள்

18 செப் 2017
10:38

திருச்சி இலக்கிய வாசகர்களின்  ‘காவேரி இலக்கியக் கூடல்’ மூன்றாவது நூல் விமர்சன அரங்கு கடந்த செப்டம்பர்’17 ஞாயிறன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், எழுதமிழ் இயக்கத் தலைவர் குமரசாமி தலைமையேற்க, இனிய நந்தவனம் மாத இதழின் ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். 


கவிஞர் சொர்ண பாரதியின் ‘எந்திரங்களோடு பயணிப்பவன்’, கவிஞர் கவியோவியத் தமிழனின் ‘மூங்கில் சுமக்கும் புல்லாங்குழல்’, கவிஞர் மு.பாலசுப்பிரமணியனின்  ‘கொதிக்கும் பூமி’ ஆகிய மூன்று கவிதை நூல்கள் குறித்து, பேராசிரியர் அகத்தியா, கவிஞர் பா.தென்றல், முனைவர் கீரைத்தமிழன் ஆகியோர் ஆய்வுரை வழங்கினார்கள்.

தலைமை வகித்த குமரசாமி தனது உரையில் எழுத்தாளர்களைப் பாராட்டுவதோடு நின்றுவிடாமல் அவர்களின் நூல்களை வாங்குகுவதே அவர்களுக்கு நாம் செய்யுயும் அங்கிகாரம் என்று குறிப்பிட்டார். இறுதியாக கோவிந்தம்மாள் தமிழ் மன்றத் தலைவர் பா.நாகராசன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)