பதிவு செய்த நாள்

21 செப் 2017
02:58
சுவிஸ் நாட்டில் இலக்கியப் பெருவிழா

  தமிழ்நாட்டிலிருந்து சர்வதேச தமிழர்களுக்காக வெளிவரும் இனிய நந்தவனம் மாத சஞ்சிகை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சிறப்பிழ்கள் வெளியிட்டு வருகிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மியான்மர் போன்ற நாடுகளில் உள்ள இலக்கிய அமைப்புகளுடன் இணைந்து, இலக்கிய ஆர்வலர்களின் ஒருங்கிணைப்பில் பல இலக்கிய விழாக்களை நடத்தி, சாதனையாளர்களுக்கு விருதுகளும் வழங்கிச் சிறப்பித்து வருகிறது.

இவ்வாறான தொடர் பயணத்தில், முதன்முறையாக சுவிஸ் நாட்டின் தலைநகர் பேர்னில்  இனிய நந்தவனம் சஞ்சிகையும், சுவிஸ் அன்னை இல்லம் மகளிர் அமைப்பும் இணைந்து, வரும் அக்டோபர் மாதம் முதல் நாள் ‘இலக்கியப் பெருவிழா’ நிகழ்வினை ஏற்பாடு செய்யவுள்ளது. 

‘தென்றலின் தாலாட்டு-2017’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்நிகழ்வில் இசைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம், நகைச்சுவை நாடகம், சுவிஸ் சாதனையாளர்கள் ஐவருக்கு விருதுகள், இனிய நந்தவனம் சர்வதேச சிறப்புமலர் வெளியிடல் என கோலாகல விழாவாக நடைபெற இருக்கிறது. சிறப்புமிக்க இந்நிகழ்வில் தமிழக கவிஞர்,’தங்கம் மூர்த்தி’ தலைமையில் பட்டிமன்றமும் நடைபெற இருக்கின்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை சமூக ஆர்வலர் வித்தகன் சுவிஸ் சுரேஷ், நந்தவனம் சந்திரசேகரன் மற்றும் சுவிஸ் நாட்டின் இலக்கிய ஆர்வலர்கள் முன்னின்று தயார்செய்து வருகிறார்கள்.

 தொடர்புக்கு : nandavanam10@gmail.com



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)