தலைப்பு : மொழியும் நிலமும்
ஆசிரியர் : ஜமாலன்
பதிப்பகம் : கருத்துபட்டறை
விலை : 210/-

பதிவு செய்த நாள்

25 செப் 2017
15:21

 மாலன் எழுதிய, ‘மொழியும் நிலமும்’ நூல் வெளியீடு மற்றும் விமர்சனக் கூடல் நிகழ்வு கருத்து -பட்டறை இலக்கிய அமைப்பு சார்பில் கடந்த ஞாயிறு அன்று மதுரை பிரேம் நிவாஸ் அரங்கில் நடைபெற்றது. ஏர் மகசாரன் தலைமையேற்று நடத்திய இந்நிகழ்வில், வி.பரமன் வரவேற்புரை வழங்கினார். கருத்தாளர்களாக முனைவர்.பெ.கமலா (முன்னாள் முதல்வர் எஸ்.எப்.ஆர் மகளிர் கல்லூரி சிவகாசி), எழுத்தாளர் சா.தேவதாஸ், கவிஞர்.சக்தி ஜோதி, கவிஞர் சக்திஜோதி, ஆய்வாளர் பெரியசாமி ராசா ஆகியோர் ‘மொழியும் நிலமும்’ நிலமும் நூல்குறித்து விமர்சன உரை வழங்கினார்கள். நிறைவாக எழுத்தாளர் ஜமாலன் ஏற்புரையும், கருத்துப்பட்டறை சார்பில் நன்றியுரையும் வழங்கப்பட்டது.

 உயிர்த்தலின் இடத்தை வாழ்தல் பிடித்தவுடன், “ வாழ்தல்” - நுண்ணிய தொழில் நுட்பமாக உருவாகி சீரற்ற சமூகப்பரப்பில் சீரான ஒழுங்குகளைப் புகுத்தி பாரிய தொழில்நுட்பமாக வளர்ந்து தனது ஆதிக்கத்தை பரப்புகிறது. இப்பரவலின் வழி செயலுக்கு வரும் “ வாழ்தல் - சார் சிந்தனை ஆதிக்கம் பெற்று ஒரு வன்முறை கருவியாக கட்டமைக்கப்படுகிறது. சீரற்றவை என்பதை சிதைத்து சீரானவற்றை ஒழுங்கமைத்த “ வாழ்தல்” தொழில்நுட்பமே, பல நூற்றாண்டுகளாக தத்துவத்தின் சிக்குகளுக்கு பிடிபடாத“தத்துவப்” பிரச்சனையாக வடிவமெடுக்கிறது. இவை எழுப்பிய கேள்விகள் “ பிரபஞ்சத்தின்” - எந்த மூலையிலும், எந்த மொழியிலும் ஒன்றாகவே இருந்தன. 

எழுத்தாளர்.ஜமாலன்
எழுத்தாளர்.ஜமாலன்


.”மொழியும் நிலமும்” நூலில் இருந்து...

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)