பதிவு செய்த நாள்

01 அக் 2017
16:40
ஆத்மாநாம் விருது வழங்கும் விழா - 2017

 ருடம்தோறும் ஆத்மாநாம் அறக்கட்டளை சார்பில் சிறந்த கவிஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளருக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த வருடத்திற்கான சிறந்த கவிஞர் விருது அனாருக்கும், மொழிபெயர்ப்பாளர் விருது என்.சத்தியமூர்த்திக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. மயிலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் நடந்த விழாவில்,  மலையாள எழுத்தாளர் பேராசிரியர் கே.சச்சிதானந்தம் படைப்பாளர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்தார். மேலும் அனாரின் படைப்புகள் குறித்து கிருஷ்ண பிரபு தொகுத்த கட்டுரைத் தொகுப்பும், என்.சத்திய மூர்த்தி மொழிபெயர்த்த ரூமியின் கவிதைகள் (தாகங்கொண்ட மீனொன்று) குறித்த சீனிவாச நடராஜன் தொகுத்த கட்டுரைத்தொகுப்பும் நிகழ்வில் வெளியிடப்பட்டது.
எழுத்தாளர் பெருமாள் முருகன் நிகழ்ச்சிக்கு தலைமைதாங்கினார். கவிஞர்  அனாரின் படைப்புகள் குறித்து எழுத்தாளர் இமையம் சிறப்புரையாற்றினார். இமையம் பேசுகையில் “அனாரின் படைப்புகள் மனதுக்கு நெருக்குமானவைகளாக இருக்கின்றன. அவரின் கவிதைகளில் மவுனம் நிறைந்திருக்கிறது. நிகழ்ச்சிக்குப் பேச அழைத்த பிறகு, அவசர அவசரமாக நிகழ்ச்சிக்கு வருகிற வழியில் புத்தகத்தை வாங்கிப் பத்து பக்கங்களைப் படித்துவிட்டு நிகழ்ச்சிக்கு வந்து பாராட்ட நினைப்பவனல்ல நான். அனார் எழுதத் தொடங்கிய ஆரம்பக்கட்டத்தில் இருந்தே அவரின் கவிதைகளைப் படித்து வருகிறேன். அவரை நான் ஈழத்துக் கவிஞராகவோ, இஸ்லாமியக் கவிஞராகவோ பார்க்கவில்லை. அவரை தமிழ்க் கவிஞராகப் பார்க்கிறேன். அவரின் படைப்புகள் மனதின் மீள் எழுச்சியாக இருக்கிறது. அனாரின் படைப்புகள் குறித்த கட்டுரைத் தொகுப்பை தொகுத்திருக்கிற கிருஷ்ண பிரவுக்கும் விழா குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்” என்று பேசினார்.
அவரைத் தொடர்ந்து என்.சத்தியமூர்த்தியின் படைப்புகள் குறித்துப் பேசிய எழுத்தாளர் பாவண்ணன் கன்னட மொழிக் கவிதைகளை மேற்கோள் காட்டிப் பேசினார். மேலும் ரூமியின் கவிதைகளை ‘தாகங்கொண்ட மீனொன்று’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்த சத்தியமூர்த்தியின் கவிதை தொகுப்பு குறித்துப் பேசினார்.
எழுத்தாளர் கே.சச்சிதானந்தம் குறித்து கவிஞர் சுகுமாரன் சிறிய குறிப்பை வாசித்த பிறகு, சச்சிதானந்தம் பேசத்தொடங்கினார். ஆங்கிலத்தில் பேசிய அவர், சமகாலக் கவிதைகள், மொழிபெயர்ப்புகள், உலக இலக்கியங்கள் பற்றி விரிவான ஆய்வு அடிப்படையில் பேசினார். மேலும் சமீபத்தில் கொல்லப்பட்ட கெளரி லங்கேஷில் இருந்து அதற்கு முன்பு கொல்லப்பட்ட தபோல்கர், கல்புர்கி ஆகிய படைப்பாளர்கள் மீதான ஒடுக்குமுறை குறித்த கண்டனத்தை தெரிவித்தார்.
கடைசியாக விருது பெற்ற எழுத்தாளர்கள் அனார் மற்றும் என்.சத்தியமூர்த்தி நன்றியுரையாற்றினர்.
- கவிமணிவாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)