பிறப்பு: மே 25, 1936
சொந்த ஊர்: தஞ்சாவூர்
குறிப்பு:
தமிழில் நவீன நாடகங்கள் உருவானதற்கு காரணமாக இருந்தவர் ந. முத்துசாமி. இவர் சங்கீத நாடக அகாடமியின் விருது பெற்றிருக்கிறார். தெருக்கூத்தை தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்களில் முத்துசாமி முக்கியமானவர். கசடதபற, நடை போன்ற இலக்கிய இதழ்களில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். நீர்மை உட்பட 5 நூல்களை வெளியிட்டுள்ளார்.
இவர் எழுதிய ந. முத்துசாமி கட்டுரைகள் எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நுண்கலைகள்(இசை, நடனம், ஓவியம், சிற்பம்) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. 2012 ஆம் ஆண்டு, இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கி பெருமை படுத்தியுள்ளது.