பதிவு செய்த நாள்

07 அக் 2017
13:04

ந்தக் காட்டில் வாழ்ந்துவந்த முயல்கள் எல்லாம் ஒன்றுகூடி கூட்டம் ஒன்றை நடத்தின. இளவயது முயல்கள் சுற்றிலும் அமர்ந்திருக்க, வயது முதிர்ந்த முயல்கள் எல்லாம் நடுநாயகமாக அமர்ந்திருந்தன.
“இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் நாம் பயந்து பயந்து வாழ்வது?”
“எங்கேயும் நிம்மதியாக வாழ முடியவில்லை”
“சிங்கம் தாக்குமோ, புலி தாக்குமோ, நரி தாக்குமோ என்று பயந்து பயந்து வாழவேண்டியிருக்கு.”
“இந்த வாழ்க்கையே வெறுத்துப்போச்சு.”
“நாமும் திரும்பி அடிப்போம். மோதுவோம். நாமா அவர்களா என்று பார்த்துவிடுவோம்.”
“அமைதி.. அமைதி..” முயல் கூட்டத்தின் தலைவனாக இருந்த வயதான முயல், தன் கரகர குரலில் பேசத் தொடங்கியது.
“பிள்ளைகளே… உங்களுக்கு இள ரத்தம். அதனால் உணர்ச்சி வசப்பட்டு பேசுகிறீர்கள். நாட்டுக்குள் வாழும் மனிதர்கள் போல…எல்லோரும் சமம் என்று இங்கே வாழ முடியாது. காட்டிம் நியதியே விநோதமானதுதான். இங்கே வலிமையுள்ளவன் பிழைப்பான். வலிமை குன்றியோர் அவனிடமிருந்து தப்பிப் பிழைக்க வேண்டும். நம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நாம் வேறு காட்டுக்குப் போய்விடுவோம் வாருங்கள்” என்று அந்த முயல் சொன்னது.
இளவயது முயல்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. கிட்டத்தட்ட எல்லா முயல்களும் அந்த முதிய முயலின் கருத்தை ஏற்றுக்கொண்டு, பயணப்படத் தொடங்கின.
கொஞ்ச தூரத்தில் ஒரு குளம் இருந்தது. அங்கே பல தவளைகள் வாழ்ந்து வந்தன. ஓய்வாக குளக்கரையில் தவளைகள் அமர்ந்திருந்தன. அக்குளத்தைக் கடந்துதான், காட்டின் அடுத்தப்பகுதிகுகுச் செல்ல வேண்டும். அதனால் முயல்கள் கூட்டமாக வருவதைப் பார்த்த தவளைகள், வேக வேகமாக, குபுக் குபுக் என்று நீரில் குதித்து மறைந்துகொண்டன.
இதைப் பார்த்த முயல்களின் தலைவன் மற்ற முயல்களைப் பார்த்து, “நாம் கோழைகள் தான். ஆனால் நம்மை விடவும் கோழையானவர்கள், இந்த உலகில் உள்ளனர். அவர்களே இங்கே வாழும்போது, நாம் ஏன் பயந்து இடம் மாறவேண்டும்? ஓடி ஒளிந்துகொள்ளும் திறமையை வளர்த்துக்கொண்டு இஞ்கேயே வாழ்வோம்” என்று கூற, அனைத்து முயல்களும் ஆமோதித்தன. இனி பயப்படுவதில்லை என்று தீர்மானத்தோடு அவை தங்களின் வளைகளை நோக்கித் திரும்பின.
- அன்புவாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)