தலைப்பு : தோள் சாயும் பொழுது
ஆசிரியர் : இ.எஸ்.லலிதாமதி
பதிப்பகம் : தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
விலை : 60/-

பதிவு செய்த நாள்

12 அக் 2017
06:59

    ஆணும் பெண்ணும் நண்பர்களாக எவ்வளவு தூரம் பயணிக்க முடியும்? பள்ளி அல்லது கல்லூரி வரை..? அதற்கும்மேல் திருமணங்கள் சாத்தியமாகலாம்! அதிகபட்சம்பேரால் இவ்வளவு தூரம் தான் கடந்திருக்கக்கூடும். தோள் சாயும் பொழுது நாவல் மேற்சொன்ன எல்லாவற்றையும் கடந்த ஆண், பெண் நட்பை நம் மனக் கண்ணில் பிரதிபலிக்கிறது. இளமை காலத்தில், ஓர் புரியாத உறவு, உணர்வுடன் இருந்ததையும், இருவருக்குமிடையே உள்ள முரண்களையும் இந்நாவல் பேசுகிறது. திருமணத்திற்குப் பின் தூய நட்புறவோடு இருப்பதையும், அவர்களது குழந்தைகள் வரை அந்த நட்பின் ஆழம் தொடவதையும் சுவாரஸ்யமாய் காட்சிப் படுத்துகிறது. 

நல்லவனா இருக்கணும; பிடிச்சவனா இருக்கணுமா என கணவனையும், நண்பனையும் வித்தியாசப்படுத்துவதில் தனித்துத் தெரிகிறாள் கதையின் நாயகி. ‘தோழி பக்கம் பேசுவதா; மனைவி பக்கம் பேசுவதா எனும் இரு சூழ்நிலையில், இரு உறவுகளையும் கையாளுவதில் கைதேர்ந்தவன் ஆகிறான் கதையின் நாயகன்.  

‘தண்டவாளங்கள் நினைவுபடுத்துஜின்றன நம் நட்பை’ என அவர்கள் பரிமாறிக்கொள்ளும் கவிதைகளில் யதார்த்தம் சிலிர்க்கிறது. ‘பெண்களுக்கே உள்ள பொறாமையா அல்லது நட்பிற்கே உள்ள பொசசிவ்னெஸ்சா..’ என தோழன் சிந்திக்கும் தருணங்களில் பெண்களின் மனங்களை லேசாய்ப் புரட்டிப் பார்க்க முடிகிறது. விறுவிறுப்பாய் கதையை நகர்த்துகிறார் லலிதாமதி. ‘தோள் சாயும் பொழுது’ நிஜமாகவே நம் தோளில் சாய்ந்து கொள்வதை உணர முடிகிறது. 
நன்றி : தினமலர்

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)