பதிவு செய்த நாள்

16 அக் 2017
12:27

 பிறப்பு: மே 18, 1920
சொந்த ஊர்: கும்பகோணம்
புனைப்பெயர்: விக்ரஹவிநாசன்
குறிப்பு:
தனது 16 வயதில் ‘மணிக்கொடி’ இதழில் கதைகள் எழுதத் துவங்கினார். 1941-1946 காலப்பகுதியில், கலாமோகினி, கிராம ஊழியன், சிவாஜி ஆகிய இதழ்களிலும் அடிக்கடி எழுதி வந்தார். 1965-1970 காலகட்டத்தில் தனது பட்டுச்சரிகை வணிகத்தைக் கைவிட்டு முழுநேர எழுத்தாளர் ஆனார்.  1948 ல் தேனீ என்ற இலக்கிய இதழைச் சில காலம் நடத்தினார். 'தேனீ ' இதழில் மௌனி போன்ற எழுத்தாளர்களின் சிறுகதைகளைப் பதிப்பித்திருக்கிறார்.
அவரது வீடு இலக்கியவாதிகளின் சந்திப்புவெளியாக எப்போதும் இருந்து வந்தது. இவரது சிறுகதைகள் முழுத்தொகுப்பாக எம்.வி.வெங்கட்ராம் கதைகள் என்ற பெயரில் வெளியாகியிருக்கின்றன.  நாட்டுக்கு உழைத்த நல்லவர் என்ற வரிசையில் தேசபதர்களைப்பற்றிய பள்ளிமாணவர்களுக்கான நூல்கள் இவை.
மொத்தம்  200க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். ‘வேள்வித் தீ’, ‘நித்ய கன்னி’ இரண்டும் மிக முக்கியமானவை. இவர் எழுதிய ‘காதுகள்’ என்ற புதினத்துக்கு 1993ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது கிடைத்தது.  2000ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி அவர் மறைந்தார்.



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)