பதிவு செய்த நாள்

22 அக் 2017
21:44
மறுபக்கம் நாவல் ஆங்கில மொழிப்பெயர்ப்பு -நூல்வெளியீடு.

1980களில் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் எழுந்த கலவரத்தினைப் பின்புலமாகக் கொண்டு எழுத்தாளர் பொன்னீலன் எழுதி, 2007ம் ஆண்டு வெளியான நாவல் ‘மறுபக்கம்’. அதன் ஆங்கில மொழியாக்கமான ‘The Dance of Flames’ நூல் மிசியா டேனியல் மொழிப்பெயர்ப்பில் நேற்று சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில், மூத்த அரசியலாளர் தோழர்.நல்லகண்ணு நூலின் முதல் பிரதியினை வெளியிட சி.மகேந்திரன் பெற்றுக்கொண்டார். பத்திரிகையாளர்கள் மாலன், இரா.விஜயசங்கர்,  து.ராஜா, எழுத்தாளர்கள் ஏ.எஸ்.பன்னீர்செல்வன், பேராசிரியர் அரசு , மொழி பெயர்ப்பாளர் மிசியா டானியல்   மற்றும் எழுத்தாளர் பொன்னீலன் ஆகியோர் மறுபக்கம் ஆங்கில மொழிப்பெயர்ப்பு குறித்தும், அதன் நாவலின் களமான மண்டைக்காடு கலவரம் நிகழ்த்தப் பட்டதன் பின்புலன், இன்றைக்குள்ள சமூக அரசியல் நிலையை ஆகியவற்றைக் குறிப்பிட்டு உரையாற்றினார்கள்.  

கருவாடும் மீனும் கலந்த நறுமணத்தில், தவழ்ந்தும் நடந்தும், குதித்தும், ஓடியும், பல இடங்களில் நீந்தியும், பிரச்சனைகளில் எதிர்நீச்சலடித்துக்கொண்டுமிருக்கின்ற மீனவ மக்களின் வாழ்க்கையையும், அவர்களோடு இயைந்து கலந்து வாழ்ந்துவந்த மற்றோர் இனக்குழுவினரோடு முரண்பட்டு நிகழ்த்தப்பட்ட மதவாதமும் கன்னியாகுமரியில் தழைத்த கதையினை இந்நூல் வரி வரியாக உண்மை மாறாமல் ஆவணமாக்கியிருக்கிறார் எழுத்தாளர் பொன்னீலன். இந்நூல் ஆங்கிலத்தில் வெளியானது பல்வேறு தரப்பினரிடமிருந்து வரவேற்பைப் பெற்றுள்ளது.  இதே தலைப்பில் ஆஸ்திரேலிய எழுத்தாளர் ஜென்னில் நெல் ( Janni Nell ) எழுதிய நூல் ஒன்றும் முன்பே வெளியாகியுள்ளது குறிப்பிடத் தக்கது. வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)