பதிவு செய்த நாள்

22 அக் 2017
22:36

    ‘ போர்ஹேஸ் - கதைகள், கட்டுரைகள் & கவிதைகள் தமிழில் பிரம்மராஜன்’- நூல் வெளியீட்டு விழா இன்று ‘நடுபகல்’ சென்னை, எழும்பூர் இக்‌ஷா மையம் அரங்கில் நடைபெற்றது. ஏற்கனவே முன்வெளியீட்டுத் திட்டம் மூலம் வாசகர்கள் மத்தியில் பரவலான கவனம் பெற்ற இந்நூலின் வெளியீட்டு நிகழ்வு மிகுந்த கவனத்திற்குரியதாக அமைந்தது. 
கவிஞர் தேவேந்திர பூபதி நூலின் முதல் பிரதியினை வெளியிட, எழுத்தாளரும் விமர்சகருமான வாசுதேவன் பெற்றுக்கொண்டு நூல் குறித்து உரையாற்றினார். கவிஞர்.குணா கந்தசாமி, எழுத்தாளர் .பாலசுப்ரமணியன் பொன்ராஜ் ஆகியோர் போர்ஹேயின் எழுத்து குறித்தும், படைப்புலகில் அவர் மேற்கொண்ட பல்வேறு மாயங்களையும் குறிப்பிட்டுப் பேசினார்கள். வி.என்.சூர்யா ‘போர்ஹேஸ்’ நூல் குறித்துக் கட்டுரை வாசிக்கக் கவிஞர்.பிரம்மராஜன் ஏற்புரை வழங்கினார். 
இந்நிகழ்வில், இடலோ கால்வினோவின் (Italo Calvino) ‘ஏன் க்ளாசிக்களை வாசிக்க வேண்டும்?’ கட்டுரையினை ( Why read the classics) குறுநூலாக யாவரும்.காம் சார்பாக வெளியிட்டுள்ளது 
‘போர்ஹேஸ்’ 

(தமிழில். பிரம்மராஜன்) 

யாவரும்.காம்,
214, 3rd bhuvaneshvari Nagar,
Behind Chennai Silks,
Velachery 600042. Ph: (+91) 9364128995 

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)