பதிவு செய்த நாள்

24 அக் 2017
11:36
மு.கருணாநிதி பொற்கிழி விருது-2017

 கலைஞர்.மு.கருணாநிதி பொற்கிழி விருது வழங்கும் விழா சென்னை,ராஜா அண்ணாமலைபுரம் டி.என்.ராஜரத்னம் அரங்கத்தில் வரும் 28-10-2017 (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்நிகழ்வில், புனைகதை எழுத்துக்காக எழுத்தாளர் பிரபஞ்சனுக்கும், நவீன இலக்கியத்துறையில் கவிஞர்.டி.கே.கலாப்ரியாவுக்கும், கட்டுரைகளுக்காக சுப.வீரபாண்டியனுக்கும், இலக்கியப் பிரிவில் தீபம்.எஸ்.திருமலை, இதழியலுக்காக .கே.ஜீவபாரதி, கவிதைகளுக்காக ஆலந்தூர்.கோ.மோகனரங்கம், சிறுவர் இலக்கியத்திற்காக பி.எல்.இராஜேந்திரன் ஆகியீருக்கு பொற்கிழி விருது வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இவ்விருது வழங்கும் நிகழ்வுக்காக கலைஞர். மு.கருணாநிதி சார்பில் ஒருகோடி ருபாய் நன்கொடை வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
    



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)