தலைப்பு : தமிழ்நாடு பயணக் கட்டுரைகள்
ஆசிரியர் : ஏ.கே.செட்டியார்
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விலை : 260/-

பதிவு செய்த நாள்

25 அக் 2017
11:58

டந்த நூறு ஆண்டுகளில் பண்டைய தமிழ்நாட்டின் பல முக்கிய ஊர்களுக்குப் பயணம் செய்தவர்கள் எழுதிய அனுபவக் கட்டுரைகளை, பாடல்களை, பயணக் குறிப்புகளைத் திரட்டி, ‘தமிழ்நாடு பயணக் கட்டுரைகள்’  என நூலாக்கியிருக்கிறார் ஏ.கே செட்டியார்.  
1911ல் திருவண்ணாமலை அருகேயுள்ள கோட்டையூரில் பிறந்த இவர் ஜப்பான் இம்பீரியல் ஆர்ட்ஸ் கலைக்கழகத்தில் புகைப்படத்துறையைத் தேர்ந்தெடுத்து படித்தவர். பின்னர் 1937ல் அமெரிக்கா சென்று அங்கு, புகைப்படக்கலை பட்டயப் படிப்பினை முடித்தார். 1940ல் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி குறித்து முதன்முதலில் வரலாற்று ஆவணப் படம் ஒன்றை இயக்கிய ஏ.கே.செட்டியார் அதற்கான உலகின் பல நாடுகளுக்குச் சென்று தரவுகளைத் திரட்டினார். 
தமிழ் பயண இலக்கியத்தின் முன்னோடியாகக் கருதப்படும் ஏ.கே.செட்டியார், தன்னுடைய பல்வேறு பயண அனுபவங்களை நூல்களாக எழுதியதுடன், மற்றவர்களின் அனுபவங்களையும், குறிப்புகளையும் தொகுத்து வெளியிட்டுள்ளார். தமிழின் மிகச்சிறந்த ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதற்காக, குமரி மலர் என்ற மத இதழைத் தொடங்கினார். 1943முதல் 1983வரை நாற்பது ஆண்டுகள் அந்த இதழ் வெளிவந்தது. தன்னுடைய 20ம் வயதில் பர்மா சென்ற ஏ.கே.செட்டியார் தனவணிகண் என்ற இதழையும் வெளியிட்டுள்ளார். 
இவருடைய, ‘தமிழ்நாடு பயணக் கட்டுரைகள்’ நூல் சென்னை முதல் குமரி வரையுள்ள பல ஊர்களின் வரலாற்று ஆவணமாக மிளிர்கிறது. ‘கலாநிதி’ ஆசிரியர் சேலம் பகடாலு நரசிம்மலு நாயுடு தொடங்கி, மயிலை கொ.பட்டாபிராம முதலியார், அ.மாதவையா, ஜி.பரமேஸ்வரன் பிள்ளை, வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி, உ.வே.சாமிநாதர், கவித்தலம் துரைசாமி மூப்பனார், துறையூர்.சுகுண சுந்தரம், எஸ்.முத்து ஐயர், திரு.வி.கலியாண சுந்தரம்,ராஜாஜி, எஸ்.ஜி.இராமானுஜலு நாயுடு, ஆ.சி.தோப்பாசாமி, அன்பில். எஸ்.வெங்கடாசாரியார், சி.சுப்பிரமணிய பாரதியார், ஜி.வைத்யனாதையர், ஜே.சி.குமரப்பா, ப.சம்பந்த முதலியார், ச.ம.நடேச சாஸ்திரி, டி.ஸி.வெங்கடரமணய்யர், சி.வி.சுவாமிநாதன், வ.த.சுப்பிரமணியப் பிள்ளை, ஜி.சுப்பிரமணிய ஐயர், பி.விஜயராகவாச்சாரி, வ.சு.செங்கல்வராயப் பிள்ளை, மு.சின்னையா செட்டியார், அரு.சோம சுந்தரம், வி.கோ.சூரியநாராயணன் சாஸ்திரி, சாது ராம சுப்பையர், கா.சுப்பிரமணிய பிள்ளை, ஆனைமலை.கி.ஸி .சீனிவாச முதலியார், ஆனந்த ரங்கப்பிள்ளை, ஜி.ரத்தினம் பிள்ளை, சுல்தான் முகையதீன் ராவுத்தர், சின்னப்பாவு முதலியார், கல்கி, திருவாரூர்.சோமசுந்தர தேசிகன், பெ.வே.மீனாக்ஷி சுந்தரம், சி.பி.முத்துச்சாமி, டி.பி.விசுவநாத பிள்ளை, திருமதி.ஹமீத் அலி, கொ.ஷண்முக சுந்தர முதலியார், செல்லம்மாள் பாரதி, மு.சின்னையா செட்டியார், ஆர்.ஸி.கஸ்தூரிரங்கைய்யர் ஆகியோரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)