பதிவு செய்த நாள்

27 அக் 2017
11:43

1940ம் ஆண்டு கேரளாவின் வடகரையில் பிறந்தவர்  மலையாள எழுத்தாளர் ‘புனத்தில் குஞ்ஞப்துல்லா’. மலையாள இலக்கியத்தில் புதுமையைப் புகுத்தியவர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவர் புனத்தில் குஞ்ஞப்துல்லா. பரலோகம், மருந்து, புனதிலிண்டே நாவலுகள், கன்யாவனங்கள், அக்னிகினவுகள் மற்றும் அம்மே காணன் ஆகிய அவரது நாவல்கள் குறிப்பிடத்தக்கவை. மேலும், அலிகார் கதகள், கத்தி, மரிசுபயா எண்டே அப்பனம்மறுக்கு, மலமுகலிலே அப்துல்லா மற்றும் பிரியபேட்ட கதைகள் ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் குஞ்ஞப்துல்லாவின் படைப்புகளில் முக்கியமானவை.இதுவரை 7நாவல்களும், 15சிறுகதைத் தொகுப்புகளும் எழுதியுள்ள  குஞ்ஞப்துல்லா’ முதன்முதலாக எழுதிய ‘ஸ்மாரக சிலகள்’ நாவலுக்கு  1978ம் ஆண்டு கேரள சாகித்ய அகாடமி விருதும், பிறகு அதே நாவலுக்கு 1980ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதும் வழங்கப்பெற்றதன் மூலம் இந்திய அளவில் கவனிக்கத்தக்க எழுத்தாளரானார். முட்டத்து வர்க்கி விருது, விஷ்வதீபம் விருது உள்ளிட்ட மதிப்புமிக்க பல விருதுகளையும் பெற்றவர் குஞ்ஞப்துல்லா’

புனத்தில் குஞ்ஞப்துல்லா
புனத்தில் குஞ்ஞப்துல்லா


இவரது  'ஸ்மாரக சிலகள்' என்ற நாவலை, ‘மீசான் கற்கள்’ என்ற தலைப்பில் குளச்சல் மு.யூசுப்  தமிழில் மொழிப் பெயர்த்திருக்கிறார். குஞ்ஞப்துல்லாவின் மஷ்ஹர் பெருவெளி, மருந்து ஆகிய நாவல்களும் தமிழில் வெளியாகி பரவலான வாசகர்களைப் பெற்ற படைப்புகள்.

அலிகார் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்த குஞ்ஞப்துல்லா 1970ல் இருந்து 1973 வரைக்கு அரசு மருத்துவராக பணிபுரிந்தார். 1974ல் இருந்து 1996 வரைக்கும் தனியார் மருத்துவமனை நடத்தி வந்தார். பிறகு 1999ம் ஆண்டில் இருந்து வேநாடு பழங்குடியினர் பகுதியில் மருத்துவராகப் பணிபுரிந்தார்.

வயது மூப்பின் காரணமாக சிகிச்சைகள் பெற்றுவந்த புனத்தில் குஞ்ஞப்துல்லா இன்று காலை தனது 77வது வயதில் இயற்கை எய்தினார். மலையாள இலக்கிய உலகம் தனது இதய அஞ்சலியைத் தெரிவித்து தங்கள் மண்ணின்  படைப்பாளனை கௌரவிக்கிறது.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)