பதிவு செய்த நாள்

29 அக் 2017
16:29
 கி. ராஜ நாராயணன் படைப்பரங்கு

   கி.ராஜநாராயணன் படைப்பரங்கு நிகழ்வு கோவை சப்னா புக் ஹவுஸ் அரங்கில் இன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கிரா சிறுகதைகள் குறித்து  கவிஞர் அவைநாயகன் மற்றும் கவிஞர் இ.இளையபாரதி இருவரும் உரையாற்றினார்கள். எழுத்தாளர் இளஞ்சேரல் ‘கோபல்ல கிராமம்’ நாவல் குறித்துப்பேசினார். கி.ராவின் பாலியல் கதைத் தொகுதியான ’வயது வந்தவர்களுக்கு மட்டும்’ தொகுப்பு குறித்து பேராசிரியர்.இரவியும், கி.ரா கட்டுரை நூல் குறித்து முனைவர் அன்பு சிவா, கி.ரா சிற்றிதழ் அனுபவங்கள் குறித்து எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன், கதவு சிறுகதை குறித்து திண்டுக்கல் தமிழ் பித்தன் ஆகியோர் உரையாற்றினார்கள். கோவை இலக்கியச் சந்திதிப்பின் 84-ம் நிகழ்வாக நடைபெற்ற இந்த படைப்பரங்கில் பேரா. திலீப் குமார், எழுத்தாளர் ஸ்ரீபதி பத்மநாபா, கவிஞர்கள் கனிமொழி.ஜி. யாழி கிரிதரன், நறுமுகைதேவி, முனைவர் மு.சரளாதேவி ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்வை கவிஞர்கள் யாழி கிரிதரன், ப.தியாகு, அனாமிகா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.  வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)