பதிவு செய்த நாள்

01 நவ் 2017
13:12
காட்ஸ் பிட்ஸ் ஆஃப் உட்  - செம்பென் உஸ்மான்

  1940களில் மேற்கு ஆப்பிரிக்காவில் தாக்கர் - நைஜர் தொடர்வண்டி பாதை அமைக்கும் பணியளர்களின் போராட்டம்தான் இந்த நாவல். செம்பென் உஸ்மான் (SEMBENE OUSMANE) ஒரு நல்ல கதை சொல்லி மற்றும் திறமையான எழுத்தாளர் என்பதை இந்த நாவல் வெளிப்படுத்துகிறது. பிரெஞ்சு மொழியில் நாடக பாணியிலேயே எழுதியிருக்கிறார். தங்களின் உரிமைகளுக்காக போராடும் அம்மக்களின் பார்வையிலேயே அவர்களின் கலாச்சாரம் வாழ்க்கை முறையின் கதையை விவரிக்கிறார். 

பிரெஞ்சு காலனிய ஆதிக்கத்தின் கீழ் இருக்கும், இரண்டு தலைமுறைகளாக ஒடுக்கப்பட்டு வந்தவர்கள், எப்படி ஒருங்கிணைந்து தனது பலத்தை வெளிப்படுத்தினார்கள் என்பது அந்த நாவல் ஆசிரியரின் முக்கியமான கண்ணோட்டம். இனி பெரியவர்களை நம்பி பயன் இல்லை. இளம் பிரெஞ்சு பேசத் தெரிந்த தொழிற்சங்கவாதிகள் ஒருங்கிணைந்து தங்களுக்கான புதிய உலகை உருவாக்க நினைக்கிறார்கள். அரசியல் ரீதியான பாலியல் பாகுபாடுகளைக் கலைந்து, வேலைநிறுத்தப் போராட்டத்தில் பெண்களுக்கான பெரிய பொறுப்புகள் கொடுக்கப்படுகின்றன.
ஒரு கடினமான கருப்பொருளைக் கொண்ட இந்த நாவலை தனது நாடக பாணியில் ஆரம்பம் முதல் முடிவு வரை விவரித்திருக்கிறார் செம்பென் உஸ்மான். ‘GOD'S BITS OF WOOD’ புத்தகத்தின் பதிப்பாளர் ஹெய்ன்மேன்.மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)