பதிவு செய்த நாள்

01 நவ் 2017
13:33
திங்க்ஸ் ஃபால் அபார்ட் - சினுவா அசிபி

சினுவா அசிபி ஒரு நைஜீரிய எழுத்தாளர். இது 1958ல் வெளிவந்த அவருடைய முதல் நாவல். வெள்ளையர்களின் காலனியாதிக்க காலத்தில், பழங்குடியினர்கள் எந்த அளவுக்கு அடிமைப் படுத்தப்பட்டார்கள் என்பதை விவரிக்கிறது. ஒகொன்வோ என்பவரைப் பற்றிய கதை இது.
அவரது தந்தை மிகவும் பயந்த சுபாவம் கொண்டவர். பெண்களைவிட குறைவாகவே உழைக்கக் கூடிய பெரிய சோம்பேரி. ஆனால், அவரது மகன் ஒகொன்வோ மிகவும் தைரியசாலி. உழைப்பாளி. தன் உழைப்பினால் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். உமொஃபியா கிராமத்தில் உள்ள இக்போ பழங்குடியினத்தில் அவரை மதிப்பிற்குரியவராகவும் அந்தக் குழுவின் தலைவராகவும் கொண்டாடுகிறார்கள்.
‘‘அவர்களுடைய பாரம்பரியம், அம்மக்களை எவ்வளவு அறிவுடையவர்களாக ஆக்குகிறது. ஆனால் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவர்கள் பகுத்தறிவற்றவர்களாகவே தெரிகிறார்கள். ஆனால் அவ்விடத்தில், அச்சூழலில் இருப்பவர்கள் மட்டுமே அதனை உணர முடியும்.’’ என சினுவா குறிப்பிடுகிறார்.  இந்த நாவல் மூன்று பாகங்களாக எழுதப்பட்டுள்ளது.
முதலில் அவருடைய குடும்பம் மற்றும் சொந்த வரலாற்றையும், இக்போ பழங்குடியினத்தின் பழக்க வழக்கங்கள் குறித்த விஷயங்கள் சுவாரசியத்தைத் தருகின்றன. இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்களில் பிரித்தானிய காலனியத்துவத்துவமும் கிறிஸ்துவ மிஷினரிகள் இக்போ இனத்தில் எந்த அளவுக்கு ஆதிக்கத்தை செலுத்தியிருக்கிறது என்பதன் வரலாற்றை விளக்குகிறது. 

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)