பதிவு செய்த நாள்

01 நவ் 2017
13:43
பேடல்ஸ் ஆஃப் பிளட் - கூகி வா தியாங்’ஓ

கென்யாவிற்குச் செல்ல விரும்பும் சுற்றுலா பிரியர்களும் படிக்க வேண்டிய நாவல் இது. முதல் முப்பது பக்கங்களைக் கடப்பது கடினமாக இருந்தாலும், அதன் பிறகு புத்தகத்தை படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியாத அளவுக்கு சுவாரசியம் நிறைந்திருக்கிறது இந்நாவலில்.
அப்பிரிக்க குக்கிராமங்கள் அளவுக்கு முதலாளித்துவ முன்னேற்றத்தின் அதிர்ச்சி நிறைந்த ஒரு வெற்றிக் கதைதான் இந்நாவல். வெளிப்படையாக கென்ய அரசை விமர்சிக்கக் கூடியவர் கூகி. இதனால் சில காலங்களை சிறையில் செலவிட்டிருக்கிறார்.
இமோரோ என்ற அமைதி நிறைந்த கிராமத்திற்கு வரும் நான்கு பேரைப் பற்றிய கதைதான் இது. முனிரா, அப்துல்லா, வஞ்ஜா, கரீகா என்ற நான்கு தோழர்கள் கென்யாவின் மாவ் மாவ் விடுதலை இயக்கத்தில் இருந்து தப்பித்து அமைதியைத் தேடி இந்த கிராமத்திற்கு வருகிறார்கள். அவர்கள் தேடி வந்த அமைதி, இமோரோ கிராமத்தில் கிடைக்கிறது. ஆனால் கிராமத்தில் வறட்சி. மக்கள் விரக்தியில் கொதிப்படைந்து போகிறார்கள்.
நைரோபி என்ற மக்கள் அமைப்பைத் தொடங்கி தங்களது உரிமைகளைக் கோரி அரசு அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்துகிறார்கள். அங்கு ஊழல், செல்வாக்கு, ஆதிக்கம் நிறைந்த இன்னொரு முகத்தை எதிர்கொள்கிறார்கள். மாவ் மாவ் விடுதலை அமைப்பில் இருந்து அமைதியைத் தேடி தப்பி ஓடி வந்தவர்களுக்கு, இது மேலும் சவாலைக் கொடுக்கிறது. அதனைத் தனது எளிமையான எழுத்து நடையில் கூகி வா தியாங்’ஓ விவரிக்கிறார்.

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)