பதிவு செய்த நாள்

02 நவ் 2017
08:46

  ‘நல்லி-திசை எட்டும் மொழியாக்க விருது-2017’ வழங்கும் நிகழ்வு கடந்த 28-10-2017 சனிக்கிழமையன்று மாலை  சென்னை தியாகராய நகர் PRCC அரங்கில் நடைபெற்றது.இவ்விருது விழாவில், திசை எட்டும் காலாண்டு இதழ் தலைமை புரவலர் நல்லி குப்புசாமி தலைமை வகிக்க, விருதுகளை முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என். கோபாலசுவாமி வழங்கினார். சாகித்ய அகாதெமி, பாரதி புத்தகாலயம், வானம் பதிப்பகங்களின் நிர்வாகிகள் பாராட்டி கௌரவிக்கப் பட்டனர். தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் ந.அருள், பதிப்பாளர் குறிஞ்சிவேலன், எழுத்தாளர் மயிலை பாலு, வாசுகி கண்ணப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

விருதுபெற்ற நூல்கள் 
உலக மக்களின் வரலாறு – கிறிஸ் ஹார்மன்.
ஆங்கிலத்திலிருந்து தமிழில் – சா.சுப்பாராவ். 

திரௌபதியின் கதை – பிரதிபா ராய்
ஒடியாவிலிருந்து தமிழில் –இரா.பாலச்சந்திரன்.
பூமியின் பாடல் – தொகுப்பு
வட-கிழக்கு இந்திய மொழிகளிலிருந்து தமிழில் – சுப்ரபாரதி மணியன்.  
புதிய தரிசனங்கள் (நியூ தர்ஷன்ஸ்) –பொன்னீலன்
தமிழில் இருந்து ஆங்கிலம் –எஸ்.நாகராஜன்.
பறந்து பறந்து –பேரா.எஸ்.சிவதாஸ்
மலையாளத்திலிருந்து தமிழ் – உதயசங்கர். 
நவீனத் தமிழ் சிறுகதைகள் – தொகுப்பு
தமிழில் இருந்து மலையாளம் – கே.எஸ்.வெங்கடாசலம்.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)