தலைப்பு : முகலாயர் வரலாறு (1526-1857)
ஆசிரியர் : முனைவர். ந.க.மங்கள முருகேசன்
பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்
விலை : 220/-

பதிவு செய்த நாள்

06 நவ் 2017
12:52

    ந்திய வரலாற்றை மூன்று பிரிவுகளாகப் பகுக்கும் காலத்துள், இடைக்கால இந்திய வரலாற்றில் இரண்டு பிரிவுகளாகப் பிரித்தால் ஒன்று சுல்தானியர்களின் காலமாகவும் மற்றொன்று மொகலாயர்களின் காலமாகவும் பிரிக்கமுடியும். இருசாரருமே ஒரே மதத்தைத் தழுவியவர்கள். ஆனால் இனத்தால் ஆப்கானியர்களாகவும், துருக்கியர்களாகவும்  அறியப்படுபவர்கள் இருவரும். 
தென்னகத்தில் ஆட்சி புரிந்த ஷியா பிரினரான பாமினி சுல்தான்களும், தில்லியில் பாபர் துவங்கி பகதூர்ஷா வரைக்கும் ஆட்சி செலுத்திய மொகலாயர்களும் இந்திய கட்டடக் கலை மரபில் சாரசாளிக் கலையைத் தோற்றுவித்தவர்கள்.  1526முதல் 1857வரை இந்திய நிலப்பரப்பின் பெரும்பான்மையான இடங்களில் தங்கள் ஆட்சியை நிறுவி, உச்சங்களையும் வீழ்ச்சியினையும் அடைந்த முகலாயர்களின் வரலாற்றைத் தெளிவுபட அறிய வாசிக்கப்பட வேண்டிய நூல் “முகலாயர் வரலாறு கி.பி-1526-1857”. 
முனைவர். ந.க.மங்கள முருகேசன் தேர்ந்த நடையில், முகலாயர்களின் வரலாற்றை ஆராய்ச்சிக் கருத்துகளோடும், வரலாற்றுப் பார்வையோடும் எழுதியுள்ளார். மொகல் ஆட்சியின் இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற சூர் மரபினரையும், மராத்திய மரபினரையும் கூட நூல்போக்கில் இணைத்து வரலாற்றை நிறைவாகப் பதிந்திருக்கிறார். பாரசீகம், அராபியம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட நூல்களில் இருந்தும், தொல்லியல் சான்றுகளில் இருந்தும், டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலேயர், அராபியர் முதலான  அயல்நாட்டவர் குறிப்புகள், நாட்டுப்புற இலக்கியங்கள் ஆகியவற்றிலிருந்து முகலாயர் கால வரலாற்றின் ஆதாரங்களைச் சேகரித்து தொகுக்கப்பட்டுள்ள இந்நூல் தமிழில் மொகலாயர் வரலாற்றை அறிவதற்கான பெட்டகமாக மிளிர்கிறது. 

ஷாஜகான்
ஷாஜகான்

-நூல்வெளி.காம்


மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)