தலைப்பு : போரின் மறுபக்கம்
ஆசிரியர் : தொ. பத்தினாதன்
பதிப்பகம் : காலச்சுவடு

பதிவு செய்த நாள்

07 நவ் 2017
11:36

 க்களோடு தொடர்புடைய அனைத்து ஊடகங்களையும் அரசுகள் கண்காணிக்கும். கண்காணிப்பற்று சமூக அசைவியக்கம் சாத்தியமில்லை என்பது இன்றைய நிலை. இவ்வாறு கண்காணிப்பதற்கு இரண்டு காரணங்களை சொல்ல முடியும். 1) கலை, இலக்கியம் மற்றும் ஏனைய ஊடகங்கள் வளியாக சிவில் சமூகத்திற்கு தவறான தகவல், மற்றும் கருத்துகள் பரப்பப்பட்டு விடக்கூடாது என்பது நல்ல அரசுகளின் நல்லெண்ணத்தின் அடிப்படையில் கண்காணிப்பது. 

2) ஆளும் அரசுகளுக்கு எதிரான, அரசுகளுக்கு பாதகமான, மக்களை அரசுகளுக்கு எதிராக தூண்டிவிடும் விதமாக ஊடகங்கள் செயல்படுகிறதா என்று கண்காணிப்பது. 

அரசுகள் செய்யத் தவறியவற்றை, அடிப்படை உரிமை சார்ந்து குரல்கள் ஊடகங்கள் வளியாக எழும்போது பெரும்பாலும் அரசுகள் தனக்கு எதிராகவே கருதும் என்பது ஆச்சர்யமான விடயமில்லை. 

“பத்தினாதனை கொஞ்சம் பார்த்து எழுதச்சொல்லுங்க” என்று நாகரீகமான அதிகாரிகளின் அறிவுறுத்தல்கள் முன்பே எதிர்பார்த்ததுதான். அதனால் பல விடயங்களை தவிர்த்து, சற்று உணர்ச்சியை தவிர்த்து, கொஞ்சம் நிதானத்துடன் எனக்கு தெரிந்தவரை வார்த்தைகளை பயன்படுத்தினேன். அடிப்படையில் நான் தேர்ந்த படைப்பாளியோ, எழுத்தாளரோ இல்லை என்பதால் எனது நேரடியான பதிவுகள் சற்று கரடுமுரடாக அமைந்திருக்கலாம். அவற்றிற்கு எந்த உள்நோக்கமும் கிடையாது. அவ்வாறு உள்நோக்கமும், வெளிப்படைத் தன்மையை மறைக்கவும் நினைத்திருந்தால் போரின் மறுபக்கத்தை நாவலாக பதிவு செய்திருப்பேன். மறைப்பதற்கு எதுவுமில்லை என்பதால்தான் தன்வரலாறாக பதிவு செய்திருக்கிறேன். 

நான் இந்தியாவில் தமிழ்நாட்டில் வாழும் அகதிகளில் ஒருவன் என்பதால் இங்கு எனக்கு வாழ்வதற்கு கொடுக்கப்பட்ட உரிமை மற்றும் வாழும் சூழலின் அடிப்படையை புரிந்து கொண்டதனால்தான் அகதி பிரச்சனை தவிர்த்து ஏனைய பிரச்சனைகளை எனது பதிவுகளில் தவிர்த்தே வருகிறேன்.

நான் போருக்கு எதிரானவன், உலகம் முழுவதும், விமர்சனத்திற்குட்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட, பன்முகத்தன்மை கொண்ட ஜநநாயகத்தை ஏற்றுக்கொண்டு மனிதநேயம் பேச நினைக்கிறேன். இதன் அடிபடையில் இருக்கும் மீதிக்காலத்தை வாழ நினைக்கிறேனே தவிர வேறு எந்த கொள்கை கோட்பாடும் எனக்கில்லை. 

நான் ஈழத்தவன் என்பதால் எனக்கு எந்த போராளிக் குழுக்களுடனும் நேரடியாகவும் மறைமுகமாகவும் எந்த தொடர்பும் இருந்ததில்லை, இனிமேல் அதற்கு வாய்ப்புமில்லை. பிறந்த, வாழ்கிற நாட்டின் இறையாண்மைக்கோ, பொது அமைதிக்கோ எந்தவகையிலும் குந்தகம் ஏற்படுத்துவது எனது நோக்கமில்லை. நான் பேசநினைப்பது எங்காவது என்னை வாழவிடுங்கள் என்பதுதான் அகதிகள் முகாம்கள் காலியாகும்போது எனக்கு எழுதுவதற்கான தேவையுமிருக்காது.

 -தொ.பத்தினாதன் 


தொ பத்தினாதன்
தொ பத்தினாதன்


மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)