தலைப்பு : ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்
ஆசிரியர் : நீட்ஷே
பதிப்பகம் : காலச்சுவடு

பதிவு செய்த நாள்

07 நவ் 2017
12:12

 1885ல் ஜெர்மனிய மொழியில் வெளியான Thus Spoke Zarathustra-வை தத்துவார்த்த நாவல் என்றே குறிப்பிடுகிறார்கள். நான்கு பகுதிகளாக எழுதப்பட்ட இந்நூல் அதிமனிதனான ஜராதுஷ்ட்ராவின் வருகை மற்றும் அவனது எண்ணங்களை பற்றி விரிவாக கூறுகிறது. பைபிள் எப்படி எழுதப்பட்டிருக்கிறதோ அது போன்ற கவித்துவ மொழிநடையில் அதன் நேர் எதிராக சிந்தனைகளை நீட்ஷே எழுதியிருக்கிறார்.

நீதிமொழிகள் போன்று பாடல்களாகவும் அதற்கான விளக்கமாகவும் எழதப்பட்ட இந்த நூல் ஜராதுஷ்ட்ராவின் சொல்லாடல்களாக விரிகின்றன. நல்லது மற்றும் தீயதிற்கு அப்பால் நிற்கும் நற்குணம் கொண்ட அதிமனிதனாக ஜராதுஷட்ரா சித்தரிக்கபடுகிறான். பலநேரங்களில் ஜராதுஷ்ட்ரா புத்தரை போலவே இருக்கிறான். புத்த அறகருத்துக்கள் போன்ற தொனியே அவனிடமும் ஒலிக்கிறது.

மதத்திற்கு எதிரான நீட்ஷேயின் மறுதலிப்பு எளிய மறுப்பு அல்ல . மாறாக இறுகிப்போன சிந்தனை தளத்தை அவர் தனது சொற்களின் வழியே வன்முறையான பெயர்த்தெடுத்தலை மேற்கொள்கிறார் என்கிறார் விமர்சகர் ப்ளும்.

மனித இருப்பின் ஆதார கேள்விகளுக்கான விடைகளும் புதிய கேள்விகளுமே ஜராதுஷ்ட்ராவால் முன்வைக்கபடுகின்றன. மக்களை விட்டு ஒதுங்கி இயற்கையோடு தனித்து வாழ்ந்த ஜராதுஷ்ட்ரா மக்களை தேடி வந்து அவர்களிடம் தனது ஞானத்தை பகிர்ந்து கொள்கிறான். தனது கருத்துகளை ஏற்றுக் கொள்ளும் சீடர்களை அடையாளம் காண்கிறான். உயர்வகை மனிதர்களை உருவாக்குவதே தனது நோக்கம் என்று வெளிப்படுத்துகிறான். அவ்வகையில் ஜராதுஷ்ட்ரா இயேசுவின் எதிர்பிம்பம் போலவே செயல்படுகிறான்.

ஜராதுஷ்ட்ராவை வாசிப்பது ஏகாந்தமான அனுபவம். அது நம்மை அலைகள் உள்ளே இழுப்பது போல தானே இழுத்து செல்கின்றன. அலை வெளியே தள்ளுவது போல தானே வெளியே தள்ளவும் செய்கின்றன. ஜராதுஷ்ட்ராவை வாசிப்பது ஒருவன் தன்னை தானே உற்று நோக்கி கொள்வது போன்றதே. உடலை அவதானிப்பது போல நாம் சிந்தனைகளை உற்று நோக்கி ஆராய்வதோ, அவதானிப்பதோ இல்லை. இந்ததளத்தில் தான் ஜரதுஷட்ரா செயல்படுகிறான்.
-எஸ்.ராமகிருஷ்ணன். நன்றி : sramakrishnan.com

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)