பதிவு செய்த நாள்

08 நவ் 2017
14:09
உயிர்மை - நவம்பர் 2017 இதழ் 171

   உயிர்மை 2017’ நவம்பர் இதழில்  நரனின் ‘லயன் சர்க்கஸ்’,    ஷான். கருப்பசாமி எழுதியுள்ள ‘கனகாம்பரம்’ மற்றும்  புலியூர் முருகேசனின் ‘காவித் தாமரை விளையாட்டும் மொன்னைப் பாம்புக் குழுக்களும்’ ஆகிய மூன்று சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. கவிஞர்கள், இசை, மனுஷ்யபுத்திரன், வா.மு.கோமு, ஆகியோரின் நேரடி கவிதைகளும், வோல் சோயின்கா (தமிழில் அனுராதா ஆனந்த்), தேஜஸ்ரீ (கன்னடத்திலிருந்து தமிழில் நஞ்சுண்டன்) ஆகியோரின் மொழிப்பெயர்ப்பு கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.  கவிஞர் பெருந்தேவியின் ‘அழுக்கு சாக்ஸ்’ கவிதை நூல் குறித்து இயக்குநர் அம்சன் குமார் எழுதியுள்ள மதிப்புரையும், சரவண கார்த்திகேயன் எழுதிய ‘இறுதி இரவு’ சிறுகதை நூல் குறித்த நிஜந்தனின் மதிப்புரையும் இடம்பெற்றுள்ளன. ‘இயற்கையின் வடிவமைப்பாளன்’ என்ற தலைப்பில் கென்னத் க்ளார்க்கின்  ‘நாகரீகம்’, ஜேக்கப் ப்ரோனோவ்ஸ்கியின் ‘மானுடப் படியேற்றம்’ ஆகிய பி.பிசியின் இரண்டு ஆவணத் தொடர்கள் குறித்து விஷால் ராஜா எழுதியுள்ள கட்டுரையும் குறிப்பிடத் தக்கது.  


-நூல்வெளி.காம்

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)