தலைப்பு : யாரங்கே பாடுவது?
ஆசிரியர் : ஜென் ஷோஸாங், தமிழில் : ஆதி வள்ளியப்பன்
பதிப்பகம் : புக்ஸ் ஃபார் சில்ரன்
விலை : 45/-

பதிவு செய்த நாள்

10 நவ் 2017
16:26

காட்டில் எல்லோரும் உறங்கும் நேரத்தில் விழித்திருக்கும் ஆந்தை, இரவில் உணவு தேடி அலைகிறது. காலையில் களைப்புடன் அது தூங்க ஆரம்பிக்கும் நேரத்தில், ஒரு வானம்பாடி குரலெடுத்துப் பாடத் தொடங்குகிறது. ஆந்தை கேட்டுக்கொண்டதால் வானம்பாடி பாடுவதை நிறுத்துகிறது. ஆனால், அதற்குப் பிறகும் பாட்டுச் சத்தம் கேட்கிறது. ஆந்தையைத் தூங்கவிடாமல் பாடியது யார்?
எதிர்வரும் எல்லா பறவைகளிடமும் விசாரிக்கிறது வானம்பாடி. எல்லாப் பறவைகளும் ஒன்றுபோலவே இல்லையென்றும், தன்னுடைய குரல் அப்படியிருக்காது என்றும் கூவிக் காட்டுகின்றன. கடைசியாக ஆந்தையின் தூக்கத்தைக் கெடுக்கும் பறவையின் சத்தம் எது என்பதை கண்டுபிடிக்கிறதா வானம்பாடி? என்பதுதான் கதையின் கரு.
சிறுவர்கள், காட்டுப் பறவைகளின் குரல் மொழியையும் அவற்றின் வகைகளையும் தெரிந்துகொள்ள இப்புத்தகம் உதவியாக இருக்கும்.



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)