பதிவு செய்த நாள்

13 நவ் 2017
07:25
திருமண ஒத்திகை நூல்வெளியீடு

 எழுத்தாளர் ஆர்.வி.சரவணன் எழுதிய திருமண ஒத்திகை நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று சென்னை, டிஸ்கவரி புத்தக நிலையத்தில் நடைபெற்றது. இயக்குநர் கே. பாக்கியராஜ் நூலினை வெளியிட, இயக்குநர் E.ராம்தாஸ் புத்தகத்தின் பிரதியினைப் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில், இயக்குநர் மீரா கதிரவன், எஸ்.சங்கர், பாப்பனபட்டு வ.முருகன், ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க, எழுத்தாளர் குடந்தை ஆர்.வி.சரவணன் ஏற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கே. பாக்கியராஜ் தனது பாக்யா இதழில் தொடராக வெளிவந்து, இன்று புத்தகமாக உருவாகி இருக்கும் ஆர்.வி.சரவணின் கதையையும், அவரது எழுத்து முயற்சிகளையும் பாராட்டிப் பேசினார். 



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)