தலைப்பு : அவன்=அது=அவள்
ஆசிரியர் : யெஸ். பால பாரதி
பதிப்பகம் : தோழமை வெளியீடு

பதிவு செய்த நாள்

15 நவ் 2017
13:14

  ‘அவன்’ மெதுமெதுவாய் தன் உடல் மாற்றங்களை உணர்ந்து, குடும்பத்திலிருந்து பிரிந்துவந்து, தன்போல் இருப்பவர்களுடன் சேர்ந்து, பலவித கஷ்டங்களை அனுபவித்து, ஆணுறுப்பை இழந்து கடைசியில் “அவள்“ என மாறுவதாக கதை பயணிக்கிறது. திருநங்கைகளுக்கே உரிய அவமானங்கள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், கஷ்டங்கள், சலிப்புகள்.. என ஒவ்வொரு உணர்வுகளையும் அப்படியே எழுத்தின் வடிவாய் தந்திருக்கிறார் எழுத்தாளர் யெஸ்.பாலபாரதி. 

யெஸ்.பாலபாரதி
யெஸ்.பாலபாரதி

கதையில், மூன்று சம்பவங்கள் என்னை வெகுவாய் பாதித்தது. கூவாகத்துக்குப் போகிற வழியில் நான்கு பேர் ஆசன வாய் மூலம் அவளைக் கற்பழிக்கும் காட்சி, காவல் நிலையத்தில் எத்தவறுமே செய்யாமல் கைது செய்யப்பட்டு ஆடைகள் உருவப்பட்டு அடி வாங்கும் காட்சி, இறுதியாய் ஆணுறுப்பை கத்தியால் அறுக்கும்போது அவள் அலறும் காட்சி... மனக்கண்ணில் அலறி மிரட்டியிருக்கின்றன. 

அத்தனை அவமானங்களையும் வலிகளையும் தாங்கிக்கொண்டு ஒரு சராசரி வாழ்க்கைக்கு ஏங்கும் திருநங்கையின் கதை. “அவன்-அது=அவள்” 
-இந்திரா கிறுக்கல்கள், மதுரை

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)