பதிவு செய்த நாள்

16 நவ் 2017
12:54
புதிய புத்தகம் பேசுது நவம்பர் மாத இதழ்

 சிறையில் சிறுகதை எழுதியவர்..!
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி. அமெரிக்காவில் உள்ள ஒரு வங்கியில் ஏதோ முறைகேடுகள் நடந்தன. இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், அந்த வங்கியில் பணிபுரிந்த வில்லியம் ஸிட்னி போர்ட்டர் என்பவரை காவலர்கல் கைது செய்தார்கள்.
ஆனால் வில்லியம், இந்த விஷயத்தில் தான் நிரபராதி என்றும் வேறொரு ஊழியர் தன்னைச் சிக்கவைப்பதற்காக சதி செய்ததாகவும் வாதிட்டார். ஆனால் சாட்சிகள் எல்லாம் அவருக்கு எதிராக இருந்தன. நீதிமன்றம் அவருக்கு ஐந்தாண்டு தண்டனை விதித்தது.
சிறையில் அடைக்கப்பட்ட வில்லியம் அங்கே சும்மா இருக்கவில்லை. தன் குடும்பத்தின் செலவுக்குப் பணம் வேண்டுமே, அதற்கு என்ன செய்வது என்று யோசித்தார். கடைசியில் அவர் சிறுகதைகள் எழுதி பத்திரிகளுக்கு அனுப்பினார். தன் சொந்தப் பெயரில் எழுதாமல் வேறொரு புனைப் பெயர் வைத்துக்கொண்டார்.
1899ல் வில்லியம் ஸிட்னி போர்ட்டரின் முதல் கதை பிரசுரமானது. அந்தக் கதையை வாசகர்கள் மிகவும் விரும்பினார்கள். அதன் பிறகு அவரது கதைகள் எல்லாமே, ஒன்றைவிட மற்றொன்று சிறந்ததாக அமைந்தன. சிறையில் இருக்கும்போதே அவர் மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளராக ஆனார்.
வில்லியம், சிறையில் மிகவும் நல்ல முறையில் நடந்துகொண்டார். அதனால் மூன்று வருடம் முடிந்ததும் அவர் விடுதலை செய்யப்பட்டார். சிறையிலிருட்ந்ஹு விடுதலை பெற்று வெளியே வந்ததும் அவர் கதை எழுதுவதையே தன் தொழிலாக மாற்றிக்கொண்டார். விரைவிலேயே உலகப்புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவராக ஆனார். அந்த எழுத்தாளர்தான் அமெரிக்க எழுத்தாளர் ஓ ஹென்றி. இவரது உண்மையான பெயர் வில்லியம் ஸிட்னி போர்ட்டர்.
உலகின் மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவர்தான் ஓ ஹென்றி. 1892, செப்டம்பர் 11ல் பிறந்தார். 1910, ஜூன் 5ல் மறைந்தார்.
புதிய புத்தகம் பேசுது நவம்பர் மாத இதழிலிருந்து….

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)