பதிவு செய்த நாள்

19 நவ் 2017
22:00
 அம்மா வந்தாள் - தி.ஜானகிராமன்

  ஒரு கட்டுடைப்பிற்கு பின்னால் ஆணித்தனமாக தனிமனித விருப்பம் இருந்தே வருகின்றன. தனிமனித விருப்பு வெறுப்பிற்கு புரம்பாக கட்டமைப்பானது நெருக்கும் பொழுது கட்டுடைப்பானது நிகழ்ந்திடவும் செய்கின்றது. ஒரு பெண்ணிற்கு ஏற்படும் காதலில் இருந்து திருமணத்திற்கு பிறகான காதல், அம்மா ஸ்தானம் அடைவதற்கு பின்னாலான காதல் எல்லாம் கௌரவம் சார்ந்தும் புனிதம் சார்ந்தும் உடைபட்டுகிடப்பது தான். இந்த இறுக்கமான கட்டமைப்பான தனிநபரது தீவிரம் சார்ந்தே தகர்க்கப்படுகின்றது. இந்த மாதிரியான ஒரு காதலின் பொழுதும் ஈர்ப்பின் பொழுதும் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி. தங்கள் விருப்பத்தின் பேரில் இருப்பதில் குற்றமேதும் இருக்கப் போவதில்லை. அதையும் தாண்டி இருவருக்குமாக ஒரு பொறுப்பு உணர்வு என்பது அவர்கள் சார்ந்த மனிதர்கள் பொறுத்தே அமைகின்றது. 

நம் கொள்கின்ற எந்த உறவு நிலையும் நாம் சார்ந்தது மட்டுமே. ஆனால், நம் உறவு நிலைக்கான புரிதல் என்பது நாம் கொடுக்க வேண்டிய கட்டாயங்கள் அதீதமாய் இருக்கின்றது. ஏனெனில் மனிதர்கள் மனதின் பெயரால் கட்டமைக்கப்பட்டவர்கள். 

அலங்காரத்தின் குற்ற உணர்வு என்பது இந்த மனித மனங்களின் பெயரிலே உருபெறவும் செய்திருக்கின்றது. இது தான் தி.ஜா என்று சொல்லலாம்.இந்த புத்தகம் எழுதியதற்கு அவர் ஊரிலிருந்து விளக்கவும் செய்திருக்கின்றார்கள். 

அலங்காரம் யாருமே தீண்டாத ஒரு மரணத்தை நோக்கும் வாழ்க்கைக்கு தயாரகுகிறேன் என்கின்ற இடத்தில் ஒரு இனம்புரியா புரையோடிப்போன சமூக விழுமியம் மீதான அழுத்தமான தளத்தின் முடிச்சுகளை அவிழ்க்கின்றான் நம் மனவெளியில். 

இந்துவின் காதலுக்கு பாத்தியப்பட்ட அப்பு என்பதும் இந்த சமூக முறையில் கட்டமைப்புக்கு எதிராகிய நேசமே.இந்துவிடமிருந்து அப்பு பிரிகையிலும் அந்த பாரத்தில் அதே விழுமியத்தை உடைக்கின்றார். 

அந்த காலகட்டத்தின் விதவதைகளின் அடையாளப்படுத்தலுக்கு சிக்காத ஒன்றாய் இந்துவை கட்டமைத்த தி.ஜாவை நேசித்துமாளாது. இந்த நாவலில் பெரிதும் மனதில் இறுக்கமும் தளர்வும் இந்துவும்,அலங்காரத்தின் கணவரும் கையகம் செய்திருக்கிறார்கள். ரொம்ப நாளா வைத்த ஏக்கம் எல்லாவற்றிற்குமாக அம்மா வந்தாள்-இன் பயணம் என்பது ஒரு அழுத்தமும், தாக்கமுமாகவே இருக்கின்றது.
-தமிழ் அரசன்.

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)