தலைப்பு : பாதரசப் பிரியங்கள்
ஆசிரியர் : சாய் இந்து
பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம்
விலை : 100/-

பதிவு செய்த நாள்

26 நவ் 2017
18:21

சமீபத்தில் வெளியான கவிஞர் சாய் இந்து-வின் ‘பாதரசப் பிரியங்கள்’ கவிதை நூல் குறித்தான விமர்சனக் கூட்டம் இன்று சென்னை டிஸ்கவரி புத்தகநிலைய அரங்கில் நடைபெற்றது. யாவரும்.காம் ஒருங்கிணைத்திருந்த இந்நிகழ்வில் நூல் குறித்து, கிருபாசங்கர் மனோகரன், கவிஞர். தீபா லக்ஷ்மி, கவிஞர்.சூரியதாஸ், கவிதைக்காரன் இளங்கோ ,  இலக்கிய விமர்சகர் எஸ்.சண்முகம், ஆகியோர் உரை நிகழ்த்தினர்.   ‘கவிதைகளின் சமகாலத் தன்மை குறித்தும் கவிதைகள் பற்றிய அடிப்படை புரிதல் தன்மையை எவ்வாறு அனுக வேண்டுமென்றும்’ இலக்கிய விமர்சகரான சண்முகம் ஆற்றிய உரை செறிவானதாக அமைந்தது. 

இறுதியாக தனது கவிதைகளின் இயங்கு தளம் குறித்தும், கவிஞர்களிடையே பால் பேதம் பார்க்கும் தன்மையை தான் ஏற்பதில்லை எனவும் நூலாசிரியர் சாய் இந்து ஏற்புரை வழங்கினார். இந்நிகழ்வில் எழுத்தாளர்கள் லக்ஷ்மி சரவணகுமார், ஜீவ கரிகாலன்,  அகரமுதல்வன்,  ரமேஷ் ரக்சன், விஜய் மகேந்திரன் மற்றும் உதவி இயக்குநர் அருண் ஆகியோர் கலந்துகொண்டனர்.    

 வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)