பதிவு செய்த நாள்

26 நவ் 2017
18:53
மழைக்கால இரவு - தமிழினி ஜெயக்குமரன்

  வாசக சாலை ஒருங்கிணைத்து, சென்னை டிஸ்கவரி புத்தக நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் வரிசை நிகழ்வில், தமிழினி ஜெயக்குமரனின், ‘மழைக்கால இரவு’ சிறுகதை நூல் குறித்த அறிமுகம் நடைபெற்றது. இந்நிகழ்வில், புத்தகம் குறித்து வாசகர் பார்வையில் பேசிய அருந்தமிழ் யாழினி, சிறுகதைகளின் தன்மை குறித்தும் அவை வெளிப்படுத்தும் துயரங்கள் மிகுந்த வாழ்வின் கசடுகளையும், தன்னுடைய வாசிப்பு அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார்.
புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு மகளிரணித் தலைவராக இருந்த நூலாசிரியர் தமிழினியின் இந்தக் கதைகள் எப்பேர்பட்ட வரலாற்றுப் பின் புலத்திலிருந்து எழுதப் பட்டவை என்பது குறித்தும், இக் கதைகளை எழுதுவதற்குத் தகுதிவாய்ந்த நபராகவே நூலாசிரியர் இருக்கிறார் என்று தோழர் பாரதி செல்வா பேசினார். 
உலகம் முழுக்க நடைபெற்ற அரசியல் எழுச்சி, போராட்டங்களின் பெண்களின் பங்களிப்பையும், அவைபற்றிய படைப்புகளையும், ஈழப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பினை அவற்றோடு தொடர்பு படுத்தியும், யுத்த முடிவில் நிராதரவாக்கப்பட்டு, கொடுமைகளுக்கு உள்ளான மனநிலையோடு  புனர்வாழ்வுக்குத் திரும்பினவர் தமிழினி, அவருடைய படைப்புக்கள் ஒரு வரலாற்று நீட்சி. இக்கதைகள் அவ்வகை அடர்த்தியினைக் கொண்டிருக்காவிடினும் ஒரு காலகட்டத்தையப் பதிவாக இச்சிறுகதைகள் அமைந்திருக்கின்றன என்று எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி பேசி முடித்தார். 
இறுதியாக நூலின் பதிப்பாளர் ஈழவாணி நிகழ்ச்சி குறித்த தன்னுடைய கருத்துரை வழங்க, வாசகசாலையின் சார்பாக இயக்குநர் அருண் கலந்துகொண்டவர்களுக்கும்,  புத்தகம் குறித்துப் பேசியவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். 
-நூல்வெளி

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)