விலைமதிக்க
முடியாத பொக்கிஷத்தைத் தேடி, கரடி, கழுதைப்புலி, காண்டாமிருகமெல்லாம் வாழும்
அடர்ந்த காட்டுக்குள் ஐந்து பேர் சாகசப் பயணம் செல்லும் அதே இந்தியானா ஜோன்ஸின்
இந்தியன் வெர்ஷன்தான் இந்திரஜித். இந்தியானா ஜோன்ஸ் - இந்திரஜித்.
பல ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன் சூரியனிலிருந்து ஒரு துகள் பிரிந்து, பூமியை
வந்து சேர்கிறது. பாஸிட்டிவ் பவர் கொண்ட அற்புதமான, ஆச்சரியமான,
அதிசயமான கல். அதன் மருத்துவ சக்தியைச் சரியாகப் பயன்படுத்தினால்,
அடுத்துவரும் நான்கு நூற்றாண்டுகளுக்கு இந்தியா நோயில்லாத நாடாக வாழும்.
அதனைத் தேடிச்செல்லும் நாயகன்
இந்திரஜித். அதனைத் தடுத்து அபகரிக்க முற்படும் வில்லன் இவர்களுக்கிடையே
காட்டுக்குள் நடக்கும் சாகசங்களைக் கொண்டு வெளியான இந்திரஜித் படத்தின்
திரைக்கதையை குழந்தைகளைக் கவரும் விதமாக காமிக்ஸ் புத்தக வடிவிலும் உருவாக்கியிருக்கிறார்கள்.
கதையில் இடம்பெறும் `ஹேப்பி' எனும் நாய்க்குட்டி செய்யும்
அட்டகாசங்கள் பிரமாதமானது. புதையலைத் தேடி காட்டுக்குள்
பயணம், காட்டு விலங்குகளின் அட்டாக், ஹீரோவின் சாகசம் என காமிக்ஸ் பிரியர்களுக்கு ஒரு புதிய தீனி
இந்திரஜித். இந்தப் புத்தகத்தை குழந்தைகளுக்கு மத்தியில் நடிகர் விவேக் வெளியிட்டு
அவர்களோடு மகிழ்ச்சியில் திளைத்தார்.