தலைப்பு : அறம் செய்ய விரும்புவோம்
ஆசிரியர் : மோ.கணேசன்
பதிப்பகம் : புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
விலை : 50/-

பதிவு செய்த நாள்

28 நவ் 2017
17:56

தையின் மாந்தர்கள் : தமிழ்வாணன் - பத்திரிக்கையாளர் (அப்பா), தாமரை - இல்லத்தரசி (அம்மா), ஆதித்தன் - நான்காம் வகுப்பு மாணவர் (மூத்த மகன்), அகிலன் - ஒன்றாம் வகுப்பு மாணவர் (இளைய மகன்)
இடம் : தமிழ்வாணனின் வீடு
காட்சி 1
(அன்று ஆதித்தனுக்குப் பிறந்தநாள். சுற்றுச் சுவரில் வண்ணக்காகிதங்களும், பலூன்களும் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளன. வீட்டின் ஹாலில் அனைவரும் இருக்கின்றன. தமிழ்வாணன் ஆதித்தனுக்கு பொம்மைக் கார் ஒன்றும் ஒளவரையாரின் ஆத்திச்சூடி  புத்தகம் ஒன்றையும் பரிசாகத் தருகிறார்)
தமிழ்வாணன் : பிறந்தநாள் வாழ்த்துகள் ஆதித்தா! கார் உனது விளையாட்டுத் திறனுக்கு... ஒளவரையாரின் ஆத்திச்சூடி உனது அறிவுத்திறனுக்கு... ஆதித்த கரிகாலன் சோழனைப் போல் உன் வாழ்க்கையில் நீ உயர வேண்டும். வாழ்த்தும் ஆசியும்!
(அண்ணனுக்கு மட்டும் அப்பா பரிசு கொடுப்பதைப் பார்த்து, தம்பி சோகமாக நிற்கிறான்)
ஆதித்தன் : கண்டிப்பாக, உங்கள் எண்ணப்படி நடப்பேன் அப்பா. பொம்மைக் கார் அழகா இருக்கு. ஒளவையாரின் ஆத்திச்சூடி புத்தகம் எனக்கு இப்போ தேவைதான்பா. நேத்துதான் எங்க தமிழாசிரியை ஆத்திச்சூடி பத்தி சொல்லிக்கொடுத்தாங்க. ஆமாம்ப்பா. எனக்கு மட்டும்தான் கிப்ட் வாங்கியிருக்கீங்க! தம்பிக்கு இல்லையா?
தமிழ்வாணன் : அவருக்கு இல்லாமலா. அவருக்கும் சேர்த்துதான் பொம்மைக் கார் வாங்கி வந்திருக்கேன். இந்தா அகிலா!
அகிலன் : (ஓடிவந்து பெற்றுக்கொள்கிறான்) ஹைய்யா! எனக்கும் கார்.
தாமரை : சரி சரி! பொம்மைகளை எல்லாம் எடுத்து வச்சிட்டுக் கிளம்புங்க. ஆதித்தன் பிறந்தநாளை வழக்கம் போல, பெரிய ஹோட்டலுக்குப் போய் கொண்டாடலாம். (தமிழ்வாணனைப் பார்த்து) ஏங்க, பர்த்டே பார்ட்டி ஹாலை புக் பண்ணிட்டீங்கதானே?
தமிழ்வாணன் : நேத்தே புக் பண்ணியாச்சு தாமரை. கேக், ஸ்வீட், சாக்லேட்ஸ், கிராண்ட் லஞ்ச்னு எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டேன். ஆதித்தனோட பிரெண்ட்ஸ்களை இன்வைட் பண்றது மட்டும்தான் பாக்கி.
ஆதித்தன் : அப்பா….அம்மா இந்த முறை ஹோட்டலுக்குப் போக வேணாம்.
தாமரை : ஏன்பா! ஏன் வேணாங்கற… உன் பிறந்தநாளை எப்போதும் கிராண்டா ஹோட்டல்ல கொண்டாடுறதுதானே வழக்கம். உன் பிரண்ட்ஸ்ங்களை எல்லாம் இன்வைட் பண்ணுவியேப்பா?
அகிலன் : ஏன் அண்ணா வேணாங்கற? ஹோட்டலுக்கு போலாம் அண்ணா
ஆதித்தன் : வேணாம் அம்மா. என் பிறந்தநாள் அன்னைக்கு பெரிய ஹோட்டலுக்குப் போய், நிறைய செலவு செஞ்சி கொண்டாடுறோம். அது வேணாமே. (அகிலன் பக்கம் திரும்பி) வேண்டாம் அகிலா. இந்த முறை ஹோட்டல் வேண்டாம்.
தமிழ்வாணன் : ஏம்பா இப்படி சொல்ற? அப்பா சம்பாதிக்குறதே உங்களுக்காகத்தானே…உன் பிறந்தநாள் எங்களுக்கு எல்லாம் ரொம்ப சந்தோஷமான நாளாச்சே…ஏன் அப்பாகிட்ட பணம் இல்லையோன்னு நினைக்கிறியா?
ஆதித்தன் : அப்படி எல்லாம் இல்லப்பா…நான் ஒண்ணு சொல்வே. கேக்கறிங்களா
தமிழ்வாணன் : சொல்லுப்பா…
ஆதித்தன் : ஹோட்டலுக்குப் போய், நம்ம ஃபேமிலி, என் பிரெண்ட்ஸ்ங்க எல்லாம் சேர்ந்து கொண்டாடினா நிறைய செலவு ஆகும். அதுக்கு பதிலா (என்று வார்த்தையை இழுத்தபடி தயங்குகிறான்)
தாமரை : சொல்லுப்பா… தயங்காம சொல்லு!
ஆதித்தன் : எங்க ஸ்கூல் போற வழியிலதான் ‘அன்பு இல்லம்’ என்ற ஒரு இடம் இருக்கு. அங்கே ஆதரவற்ற குழந்தைகளும், பெரியவர்களும் இருக்காங்க. இந்த முறை என் பிறந்தநாளை அவங்களோட சேர்ந்து கொண்டாடலாம்பா…அவங்களோட ஒண்ணா உக்காந்து சாப்பிடலாம்பா…காலையில இருந்து சாயந்திரம் வரைக்கும் அவங்களோடயே இருக்கலாம்பா…
தமிழ்வாணன் : அட! ஆதித்தா… இதைச்சொல்ல ஏம்பா தயங்கின? இதைக் கேட்கும்போது மனசுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? எப்போதும் உன் பிறந்தநாளுக்கு பெரிய ஹோட்டலதான் பாட்டி வைக்கணும். அங்கதான் நான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிக்கிற நீ, இப்படி சட்டுன்னு மாறிட்டியே… உன்னை நினைச்சி நாங்க பெருமைப்படறோம்!
ஆதித்தன் : இப்படி மாறினதுக்கு காரணம், எங்க சங்கீதா டீச்சர் நடத்தின ஆத்திச்சூடிதான்பா. ‘அறம் செய விரும்பு’ன்னு அவங்கதான் சொல்லிக் கொடுத்தாங்க. அறம் செய்யறதுக்கு வயசோ, பொருளோ தேவையில்ல. நல்ல மனசு இருந்தா போதும். அதுவே உன்னை உயர்த்தனும்னு சொன்னாங்க அப்பா.
தமிழ்வாணன் : அட ஒளவையாரின் ஆத்திச்சூடி… ஆதித்தனை மாத்திடிச்சே… ரொம்ப சந்தோஷப்படறேன்.
அகிலன் : அறம் செய விரும்புன்னா என்னப்பா?
தமிழ்வாணன் : எப்போதும் நல்ல செயல்களை, பிறருக்கு உதவும்படியான செயல்களை செய்ய விரும்ப வேண்டும்னு அர்த்தம். சரி வாங்க, அன்பு இல்லத்துக்குப் போகலாம்.
அகிலன் : அப்பா….இனி என் பிறந்தநாளையும் அன்பு இல்லத்திலதான் கொண்டாடனும். ஏன்னா, நானும் அறம் செய விரும்பறேன். (எல்லோரும் சிரிக்கின்றனர். அம்மா தாமரை அகிலனை வாரியணைத்து முத்தமிடுகிறார்
(திரை விழுகிறது)
ஆத்திச்சூடி வரிசையின் மற்ற கதைகளுக்கு இந்நூலை வாசிக்கவும்...வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)