பதிவு செய்த நாள்

01 டிச 2017
14:24
Independent People - Halldor Laxness

 ல்ல, சிறந்த, மகத்தான நாவல் வெறுமனே எழுதப் படுவதில்லை. மாறாக படைக்கப்படுகிறது. அந்த நாவல் எழுதியவனின் படைப்பாற்றல் படித்த புத்தகத்திலிருந்தும்,கேட்டறிந்த தகவல்களில் இருந்தும் பிறப்பதில்லை. அது அவனின் உண்மையான ஆன்ம வெளிப்பாட்டில் இருந்தும், எண்ணங்களில் இருந்தும், பிறந்து வளர்ந்து ஓடியாடி விளையாடி மறைந்து போகும் மண்ணின் மீதான காதலில்இருந்தும் , அந்த மண்ணை காலம் காலமாக கட்டிக் காத்து வரும் மைந்தர்களின் மீதான் அக்கறையில்,நேசத்தில் இருந்தும் பிறக்கிறது என்று நம்புகிறேன்.
அப்படி படைக்கப்படும் நாவலை என் மன நிலையில் இருந்தும், உங்களின் மன நிலையில் ,பல்வேறு மக்களின் பல்வேறு மன நிலையில் இருந்தும் வாசிக்கும்போது நிச்சயம் அது ஒவ்வொருவருக்கும் ஒரு அர்த்தத்தை தரக் கூடியதாக இருக்கும். நாவல்கள் என்று சொல்லப்படும் அநேக கதைப்புத்தகங்களில் உள்ள கதையை நீங்கள் எடுத்துவிட்டால், அதில் படிப்பதற்கோ,இல்லை நம்மை சிந்திக்க வைப்பதற்கோ எதுவுமே இருக்காது.
ஆனால், சில நாவல்களில் பெரும்பாலும் கதைகள் முக்கியத்துவம் பெறுவதில்லை. அந்த கதைகளை சுழற்றி தூக்கி எறிந்துவிட்டு நீங்கள் எந்தப் பக்கத்தில் இருந்தும் படிக்க ஆரம்பிக்கலாம். அந்த நாவல் உங்களின் சிந்தனையை,அறிவை தூண்டும் விதமாக ஒவ்வொரு பக்கத்திலும் காட்சியளிக்கும். உதாரணத்துக்கு தஸ்தயேவ்ஸ்கியின் 'கரமசோவ் சகோதரர்கள்'. தந்தை கொலை செய்யப்படுகிறார். மூத்த மகன் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு விசாரணை நடக்கிறது. கொலையாளி உண்மையில் யார் என்று வாசகனால் அறிந்து கொள்ள முடியும். ஏறக்குறைய ஆயிரம் பக்கங்களுக்கு மேல் உள்ள கரமசோவின் கதையை ஒரே பக்கத்தில் எழுதிவிட முடியும். ஆனால், கதையைத் தாண்டி மனிதனின் இயல்புகளை ஆழமாக ஊடுருவிப் பார்க்கும் உரையாடல்களை, விவாதங்களை ஒவ்வொரு பக்கத்திலும் ஓவியம்போல் தீட்டியிருப்பார் தஸ்தயேவ்ஸ்கி. முக்கியமாக மனிதனின் உண்மையான இயல்பு எந்த மாதிரியான சூழலில் வெளிப்படுகிறது. மற்ற நேரங்களில் அவன் எப்படியெல்லாம் தன்னை வடிவமைத்துக்கொள்கிறான். பாவனை செய்கிறான் என்பதை அழகாக எழுத்தில் வடித்திருப்பார்.
இந்த மாதிரியான ஒரு நாவல் தான் 'Independent People'. வெறுமனே உணர்வுரீதியாக நம் மனதை கட்டிப்போடும் கதையோ, எழுத்துக்கோர்வையாலும், சுவாரஸ்யமான நடையாலும் நம்மை வசீகரிக்கும் தன்மையோ இந்த நாவலுக்கு இல்லை என்று தான் சொல்லமுடியும். ஆனால், ஏதோவொன்று இருக்கிறது. வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அந்த ஏதோவொன்று நிச்சயமாக கிடைக்கலாம்.
நாம் எல்லோரும் எதை விரும்புகிறோமோ,எதை வேண்டுகிறோமோ ,எதற்காக இவ்வளவு போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறதோ அந்த சுதந்திரத்தை ,விடுதலை உணர்வை அழகாக அலசுகிறது. ஒரு கதையைத் தாண்டி நாவலை வாசிக்கிறோம் என்ற உணர்வைத் தருகிற படைப்பு இது. இந்நாவலுக்கு 1955ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
- அல்யோஷா

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)