பதிவு செய்த நாள்

03 டிச 2017
13:37
தமுஎகச - இலக்கியச் சந்திப்பு - நிகழ்வு 188

 தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், கோவை மாவட்டக்குழுவின் சார்பில் கவியரங்கம், நூல்  அறிமுகம், திரை விமர்சனம் 188வது நிகழ்வு இன்று காலை கோவை தாமஸ் கிளப் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கூடல் தாரிக்கின் கவிதை நூலான பெருங்காட்டுச் சுனை குறித்து  மு.ஆனந்தன் உரை நிகழ்த்தினார். ஷான்  கருப்புசாமியின் வெட்டாட்டம் நாவல் குறித்து,  எழுத்தாளர், மொழிப்பெயர்ப்பாளர்  ரவிச்சந்திரன் அரவிந்தன் அறிமுகம் செய்து பேசினார்.

‘திப்பு சுல்தான் எனும் சமூகப்போராளி’  என்ற தலைப்பில்  பா.மீனாட்சிசுந்தரம் சிறப்புரையும், சமீபத்தில் வெளியான அறம் திரைப்படம் குறித்த மு.முஹம்மது அலீ ஜின்னாஹ்  விமர்சன உரையும் நிகழ்ந்து. முன்னதாக விருப்பத் தலைப்புகளில் படைப்பாளர்களின் கவியரங்கமும், இ.வெ.வீரமணி, தஞ்சை தமிழ்வாணன் ஆகியோரது பாடல்களும்  பாடப்பட்டது. மனோ இளங்கோவன் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார்.

 



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)