பதிவு செய்த நாள்

04 டிச 2017
12:48

  ல்வேறு அரிய நூல்களை மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்த மொழிபெயர்ப்பாளர் எம்.எஸ் என்கிற எம்.சிவசுப்பிரமணியம் நேற்று காலமானார். நவீன தமிழ் இலக்கிய மொழி உருவாக்கத்தில் இவருடைய பங்கு மிகவும் முக்கியமானது.

எம்.எஸ்
எம்.எஸ்

இவருடைய மொழிபெயர்ப்பு நூலான எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் ‘கடலும் கிழவனும்’ மிகவும் புகழ்பெற்ற நூல். எழுத்தாளர் சுந்தர ராமசாமியுடன் 50 ஆண்டு கால நட்பு, மேலும் நீலபத்மநாபன், நாஞ்சில் நாடன், தோப்பில் முகமது மீரான், ஜெயமோகன் போன்ற தமிழிலக்கியத்தின் மிக முக்கிய படைப்பாளிகளுடன் நெருங்கி நட்பு கொண்டிருந்தவர். அவர்களுடைய படைப்புகளை மெய்ப்புத் திருத்தம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது மறைவு குறித்து கவிஞர் மனுஷ்ய புத்திரன் “எம்.எஸ். என்று அன்போடு அழைக்கப்படும் எம்.சிவசுப்பிரமணியம் இன்று மதியம் காலமானார் என்ற துயரச்செய்தியை சற்று முன் ஜெயமோகன் தெரிவித்தார். எனது நீண்ட நாள் நண்பர். தமிழின் தலைசிறந்த மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர். நவீன இலக்கிய பார்வையுடன் பிரதிகளை மேம்படுத்தி செப்பனிடுவதில் அவருக்கு நிகரானவர்கள் அரிது. உயிர்மைக்கு அவர் அளித்த பங்களிப்புகளை ஒருபோதும் மறக்க இயலாது. முதுமையின் தள்ளாமையிலும் உற்சாகம் குன்றாமல் தன் பணிகளை ஆற்றி வந்தவர். மனம் கனக்கிறது. சில மனிதர்கள் இல்லாமல் போகும்போது அவர்கள் மட்டுமே செய்யக்கூடிய எத்தனையோ விஷங்கள் இல்லாமல் போகின்றன.” என்று தெரிவித்துள்ளார்.
1929ம் ஆண்டு பிறந்த எம்.எஸ்.. தனது 88 வயதில் உடல்நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3) காலமானார். இவரது மறைவுக்கு பல்வேறு எழுத்தாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
எம்.எஸ்ஸின் புத்தகங்கள்...
சகரியா கதைகள் – தமிழினி
அமைதியான மாலைப்பொழுதில்- தமிழினி
ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை – காலச்சுவடு
கிழவனும் கடலும்  –காலச்சுவடு.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)