பிறப்பு: மார்ச் 24, 1905
சொந்த ஊர்: வத்தலக்குண்டு
குறிப்பு:
1933-ல் ஆனந்த விகடன் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய ’மலரும் மணமும்’ சிறுகதைக்கு ரூ. 10 சன்மானம் பெற்றார். ’ஜயபாரதி’ இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். மணிக்கொடி என்ற இதழுக்கும் தொடர்ந்து எழுதி வந்தார். ’புதுமைக் கோவில்’, ‘பூவும் பொன்னும்’ போன்ற சிறுகதைகளை இயற்றியவர். 1982ம் ஆண்டில் ‘மணிக்கொடி காலம்’ என்ற இலக்கிய வரலாறு புத்தகத்திற்காக சாகித்திய அகாடமி விருது பெற்றவர். தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டு, 1983ம் ஆண்டு மறைந்தார்.