பதிவு செய்த நாள்

08 டிச 2017
14:38

  ழுத்துலகில் எல்லோருக்கும் பரிச்சயமானவர் பாக்கியம் ராமசாமி. பத்திரிகை உலகில் ஜ.ரா.சுந்தரேசனாக முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வார இதழ்களில் பணிபுரிந்தவர். தனது நகைச்சுவை எழுத்துகள் மூலம் இலக்கிய உலகில் தடம்  பதித்தவர்.

பாக்கியம் ராமசாமி
பாக்கியம் ராமசாமி

சேலம் ஜலகண்டபுரத்தில் பிறந்தவர். கதைகள் எழுதத் தொடங்கியது போது தனது தாய் தந்தையின் பெயரைச் சேர்த்து பாக்கியம் ராமசாமி என்று புனைப்பெயரில் எழுத ஆரம்பித்தார். 1963ல் முதன் முதலில் வார இதழில் ‘அப்புசாமி - சீதா பாட்டி’ கதாபாத்திரங்களை உருவாக்கி கதை எழுதினார். பின்னர் அவர் எழுதிய  'அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்', 'மாணவர் தலைவர் அப்புசாமி', 'அப்புசாமியும் 1001 இரவுகளும்' போன்ற புதினங்கள் பிரபலமானவை.
சமகால வாசகர்களுக்கு ஏற்றமாதிரி அப்புசாமி.காம் என்ற இணையதளத்தை தொடங்கி, அதில் தொடர்ந்து நகைச்சுவை கதைகளையும், துணுக்குகளையும் எழுதிவந்தார். சமீப காலமாக சிறுநீரகக் கோளாறு காரணமாக சிகிச்சை எடுத்து வந்த பாக்கியம் ராமசாமி நேற்று (டிச.7) இரவு காலமானார்.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)