தலைப்பு : வந்தார்கள் வென்றார்கள்
ஆசிரியர் : மதன்
பதிப்பகம் : விகடன் பிரசுரம்

பதிவு செய்த நாள்

10 டிச 2017
14:02

 நான், சமீபத்தில் மறுவாசிப்பு செய்த புத்தகம், விகடன் வெளியிட்ட, மதனின், 'வந்தார்கள் வென்றார்கள்'. நாம், பள்ளியில் சிறுசிறு குறிப்புகளாக படித்த இந்திய வரலாற்றை, எளிய தமிழில், மொத்தமாக நம் கண்முன் நிறுத்துகிறார், மதன்.வடஇந்தியாவிற்கு செல்லும் யாத்திரீகர்களின் உடைமைகளை கொள்ளையடிக்கும், நெடுஞ்சாலை கொள்ளையர்களான 'துக்'குகளை, ஜார்ஜ் வில்லியம் ஸ்லீமன் என்பவர் மொத்தமாக அடக்கியதோடு, அப்போதைய உடன்கட்டை ஏறும் பழக்கத்தையும் தடுத்தார் என்ற செய்தி, ஒரு போலீஸ் அதிகாரியாக, என்னைக் கவர்ந்தது. 

இந்தியாவின் வளம் பற்றி அறிந்து, எங்கெங்கிருந்தோ வந்து, அந்நியர் நம்மீது போர் தொடுக்கின்றனர். தைமூர் துவங்கி முகலாயர்கள் வரை நடத்திய பயங்கரமான போர்கள், அவர்களின் வளர்ச்சி, வீழ்ச்சி, இந்தியர்களின் நிலைப்பாடு என, தொடரும் சரித்திர சான்றுகள் மிரள வைக்கின்றன. தந்தை, மகன் உறவுகளுக்குள்ளேயே நடக்கும் போர், சிறைப்பிடிப்பு, கண் தோண்டுதல் போன்ற தண்டனைகள் பயங்கரமாகவே இருக்கின்றன. 

அதையடுத்து நடந்த, டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலேயர்களின் வணிக போட்டியும், அடிமைப்படுத்தும் சூழ்ச்சியும், முகலாயர்களின் வீழ்ச்சியுமாய், வரலாறு சமீபத்திற்கு வருகிறது. விவசாயம், வரி,பறவை, விலங்கு, தாவர ஆராய்ச்சி தொகுப்புகள், கலை, இலக்கிய, கட்டட பணிகள் என, அந்நியரின் நல்ல பங்களிப்பையும் உணர முடிகிறது. ராணா பிரதாப் சிங் போன்ற இந்தியர்களின் வீரம் பற்றியும், பாபர் உள்ளிட்ட முகலாயர்களுக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கம் இருந்ததையும் அறிய முடிகிறது. 

நம் இந்தியாவின் தற்போதைய கலாசாரம் என்பது, கடந்தகால ஆட்சிகளின் கலவை என்பதை, உணர முடிகிறது. 1,200 ஆண்டுகளுக்கான நம் வரலாறு என்பது, அந்நியரின் வரலாறாகவே உள்ளது. இளைஞர்கள் படிக்க வேண்டிய புத்தகம்.

சி.சைலேந்திரபாபு,ஐ.பி.எஸ்.
சி.சைலேந்திரபாபு,ஐ.பி.எஸ்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)