பதிவு செய்த நாள்

10 டிச 2017
22:22
பா.ராகவன்

 அமுதசுரபி, தாய், கல்கி  இதழ்களில் பணியாற்றிய பா.ராகவன்  தன் ஆரம்ப காலங்களில் சிறுகதைகள், தொடர்கள் எழுதிவந்தார். பின்பு, குமுதம் வார இதழ், குமுதம் ஜங்ஷன் ஆகிய சஞ்சிகைகளில் இவர் எழுதிய அரசியல் தொடர்களின் வழியாக வெகுஜன வாசகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்புக்குரியவரானார். இவரது நூல்களான, மாயவலை, பாக். ஒரு புதிரின் சரிதம், டாலர் தேசம், 9/11  சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி, நிலமெல்லாம் ரத்தம், அல்-காயிதா : பயங்கரத்தின் முகவரி, ஹிஸ்புல்லா, இராக் ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம், ஹிட்லர், அன்புடையீர் நாங்கள் பயங்கரமானவர்கள் ஆகியவை திரளான வாசகர்களைப் பெற்றுத்தந்தவை.1971ல் சென்னையில் பிறந்த பா.ராகவன், தரமணி மத்திய தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரவியல் பொறியியல் பட்டப் படிப்பு முடித்துவிட்டு, தற்போது  நியூ ஹாரிசன் மீடியா நிறுவனத்தின் முதன்மை ஆசிரியராகப் பணிபுரிகிறார். தொலைக்காட்சித் தொடர்களுக்குத் திரைக்கதை வசனம் எழுதியிருக்கும் இவர், இப்போது திரைப்படங்களுக்கும் திரைக்கதை, வசனம் எழுதுகிறார். தனது அலகிலா விளையாட்டு நாவலுக்காக இலக்கியபீடம் விருதினையும் பெற்றுள்ளார்.  ‘பூனை கதை’ எனும் நாவல் விரைவில் வெளியாக உள்ளது.

 வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)