தலைப்பு : பான் கி மூனின் றுவாண்டா
ஆசிரியர் : அகரமுதல்வன்
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்
விலை : 120/-

பதிவு செய்த நாள்

10 டிச 2017
22:51

  எழுத்தாளர் அகரமுதல்வனின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பான, பான் கி மூனின் றுவாண்டா நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 16-12-2017 சனிக்கிழமை மாலை நடைபெறவுள்ளது.  எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன் தலைமையேற்கும் இந்நிகழ்ச்சியில், பதிப்பாளர் கண்ணதாசன் நூலினை வெளியிட, எட்டுத் தோட்டாக்கள் திரைப்படத்தின் இயக்குநர் சிறி.கணேஷ் நூலினைப் பெற்றுக் கொள்கிறார். நூல் குறித்து எழுத்தாளர்கள் ஜெ.தீபா, கார்த்திக் புகழேந்தி, பதிப்பாளரான சரோ லாமோ ஆகியோர் உரையாற்றுகிறார்கள். யாவரும் பதிப்பகம் ஜீவ கரிகாலன் வரவேற்புரை வழங்க, ஊடகவியலாளர் அர்ச்சனா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.
நாள் 16 : 12 :2017
நேரம் : 5.30மணி
இடம் : கவிக்கோ மன்றம்,
5, சி.சி.டி காலனி, இரண்டாவது பிரதான சாலை, மயிலாப்பூர். சென்னை.

  வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)